NTA permission for\NEET re-examination and allotted extra time; the exam will be held for 3 hours and 15 minutes.  google
இந்தியா

நீட் மறுத்தேர்வு : ”கூடுதலாக நேரம் அனுமதி வழங்கியது NTA” : 3 மணி, 15 நிமிடங்கள் தேர்வு...!

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Rohini

கூடுதலாக 15 நிமிடம்

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுத்தேர்வின் நேரத்தை 3 மணி நேரம் 15 நிமிடங்களாக அதிகரித்து இருப்பதாக தேசிய தேர்வுகள் முகமையான என்டிஏ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

தேர்வு ரத்து : பல தரப்பிலும் எதிர்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதில் பல லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டதாக பல்வேறு தரப்புகள் இடையே எதிர்ப்புகள் வழுத்திருந்தது

நேர நீட்டிப்பு குறித்து என்டிஏ கூறும்போது

தேசிய தேர்வுகள் முகமை இதுபற்றி கூறுகையில் நீட் தேர்வை நியாயமான, பாதுகாப்பான மற்றும் தேர்வர்களின் தேவைகளை நிறைவு செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் , இதன் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்காக தேர்வர்களுக்காக சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

கடந்த காலங்களில் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) நீட்டிக்கப்படுவதாக என்டிஏ அறிவித்திருக்கிறது

தேர்வர்களின் வசதிகாக நேரம் நீட்டிப்பு

கடந்த காலங்களில் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக அதாவது 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளது

அதன்படி தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்ற தேர்வு நடைமுறைகளுக்குத் தேவைப்படும் நேரமும் இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது

கூடுதலாக rough work space அறிமுகம்

வினாத்தாள் புத்தகத்தில் rough work செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது , மேலும் இந்த தேர்வானது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

=====================