இஸ்ரேல் நாட ளுமன்றத்தில் உரை
இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசட்டில்’ சிறப்புரையாற்றி மோடி தீவிரவாத செயல்பாடுகள் எதையும் எந்த விதத்திலும் நியப்படுத்த முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.
உற்சாக வரவேற்பு
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாடாளுமன்ற வளாகத்தில் மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, மோடி.. மோடி என இஸ்ரேல் எம்.பி.க்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
இஸ்ரேல் நாடளுமன்றத்தில் பேசும் முதல் இந்திய பிரதமர்
அந்தவகையில் இஸ்ரேல் நாடளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடிபெற்றுள்ளார்.
நன்றி தெரிவித்து பிரதமர் பெருமிதம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருந்தது என்றும் தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டிருந்தார் . 9 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்ரேல் வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு உரை
இந்தியாவும் இஸ்ரேலும் சகோதர நாடுகள். பிரதமர் மோடி இஸ்ரேல் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவை வலுப்படுத்தி வந்து கொண்டு இருக்கின்றன என்றும் தெரிவித்தார் . மோடியைக் கட்டிப்பிடித்து வரவேற்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உறவை இது காட்டுகிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம்
இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவும் - இஸ்ரேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தீவிரவாத விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்றும் இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரின் அரசுமுறை பயணம்
பிரதமர் மோடி இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து தற்போது அரசு முறைப் பயணம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.