The ship Sudarshini, which has begun its voyage, is participating in the exhibition! google
இந்தியா

பயணத்தை தொடங்கிய சுதர்ஷினி கப்பல்-கண்காட்சியில் பங்கேற்பு!

ஐஎன்​எஸ் சுதர்​ஷினி கப்​பலின் நீண்ட தூர பயணம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடற்படை அதிகாரிகள் முன்னிலையில், துவங்கியது.

Baala Murugan

கடற்படையின் புதுமை

sudarshini boat இந்திய கடற்படை தொடர்ந்து பல்வேறு புதுவித முயற்சிகளை மேற்கொள்வர், குறிப்பாக புதிய கப்பல்கள் கடல்வழியாக பல நாடுகளை கடந்து, சில சாதனைகளையும் செய்யும். இதற்காக கடற்படை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கடற்படையின் புதிய முயற்சிகளை சாதனைகளாக மாற்ற, சேர்ந்து உழைப்பர்.அதனடிப்படையில், தற்போது சுதர்ஷினி கப்பல் நீண்ட தூர பயணத்திற்கு தயாராகி புறப்பட்டுள்ளது.

நீண்ட தூர பயணத்திற்கு தயாரான சுதர்ஷினி கப்பல்

கேரள மாநிலம் கொச்​சி​யிலுள்ள கடற்​படை தளத்திலிருந்து நேற்று ஐஎன்​எஸ் சுதர்ஷினி கப்​பலின் நீண்ட தூர பயணத்தை தெற்கு கடற்​படை கமாண்​டிங் இன் சீப் அதி​காரி​யும், துணை தளப​தி​யு​மான சமீர் சக்​சேனா தொடங்​கி​ வைத்தனர். இந்த கப்​பல் 22 ஆயிரம் நாட்​டிக்​கல் மைல் தூரத்​துக்கு பயணிக்க உள்​ளது. 13 நாடு​கள் வழி​யாக 18 துறை​முகங்​களுக்கு பயணம் செய்யும். இதுகுறித்து கடற்​படை செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறும்​போது, “ஐஎன்​எஸ் சுதர்​ஷினி கப்​பல் நீண்ட தூர பயணத்தை தற்​போது தொடங்​கி​யுள்​ளது.

இந்த ‘வரலாற்​றுச் சிறப்​புமிக்​கப் பயணம்’ இந்​தி​யா​வின் கடல்​சார் முயற்​சிக்கு ஒரு சக்​தி​வாய்ந்த அடை​யாள​மாகத் திகழ்​கிறது. இது உலகளா​விய கடல்​சார் நடவடிக்​கை​களில் நாட்​டின் முக்​கி​யத்​துவத்தை வெளிப்​படுத்​துகிறது. கடந்த ஆண்டு டிசம்​பரில் திருவனந்த​புரத்​தில் நடை​பெற்ற கடற்​படை தின விழா​வில் பங்கேற்று சாகசங்​கள் செய்​தது” என்​றார்.

கண்காட்சியில் கலந்து கொள்ளும் சுதர்ஷினி

மேலும் பிரான்​ஸில் வரும் மார்ச்​-ஏப்​ரலில் நடை​பெறவுள்ள கப்​பல் கண்​காட்சி திரு​விழா​விலும் பங்​கேற்​க​வுள்​ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை​யில் அமெரிக்​கா​வில் நடை​பெறவுள்ள அந்​நாட்​டின் 250-வது சுதந்​திர தினக் கொண்​டாட்​டத்​தி​லும் பங்​கேற்​கும். அப்​போது நியூ​யார்க் நகருக்கு இந்​தக் கப்​பல் செல்​லும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. சுதர்ஷினி கப்பலின் தொடர் பயணம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுதர்ஷினி கப்பல் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.