The temporary ban imposed by the Union Government has ended, and the Telegram app has resumed normal operations.  google
இந்தியா

”ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நிறைவு” : வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது டெலிகிராம் செயலி..

நீட் வினத்தாள் கசிவு காரணமாக , பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடையை மத்திய அரசு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Rohini

தேர்வு முறைக்கேடு, மறுத்தேர்வு

நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து , நடைபெற்ற தேர்வை ரத்து செய்து , 21ம் தேதிக்கு தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமையானது தெரிவித்திருந்தது

டெலிகிராம் மூலம் வினாத்தாள் கசிவு என புகார்

மே 3ம் தேதிக்கு முன்னதாக, நீட் வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ,இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த்து குறிப்பிடத்த்க்கது

இந்தநிலையில், மறு நுழைவுத் தேர்வை மிகவும் பாதுகாப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

டெலிகிராம் செய்தி மூலம் வினத்தாள் கசிந்தது என்ற புகார் எழுந்த நிலையில் , மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) குறுஞ்செயலிக்கு அதிகாரப்பூர்வமாக தற்காலிகத் தடை விதித்துள்ளது.

டெலிகிராம் தற்காலிக தடை நீக்கம்

வினத்தாள் கசிவு முறைக்கேடு அடுத்து நாடு முழுவதும் டெலிகிராம் செயலி பயன்பாட்டிற்கு மத்திய அரசு இடைக்கால தடைவிதித்திருந்த நிலையில் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

தேர்வு முடிந்ததால் தடை நீக்கம்

நீட் மறுத்தேர்வு நடந்து முடிந்ததை அடுத்து , தடையை விலக்கி கொள்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது , அதன்படி வழக்கம் போல் டெலிகிராம் செயலி இயங்கும் என தெரிவித்துள்ளது.

======================