The trade agreement between India and the UK has come into effect today AI generated
இந்தியா

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் அமல் : 2030-க்குள் ரூ.11½ லட்சம் கோடி இலக்கு : முக்கிய அம்சங்கள்...!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது.

Kannan

இந்​தி​யா - இங்​கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்

இந்​தி​யா - இங்​கிலாந்து இடையிலான ஒருங்​கிணைந்த பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் கடந்த ஆண்டு கையெழுத்​தானது.

சுங்க வரி 99% நீக்கம்

வரலாற்​று சிறப்​புமிக்க ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்தியா​வின் 99% ஏற்​றுமதி பொருட்​கள் மீது விதிக்கப்படும் சுங்க வரி​கள் நீக்கப்பட உள்​ளன.

இந்திய ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், கடல் உணவுகள் மற்றும் மருந்துகளுக்கான வரிகள் முழுமையாக பூஜ்ஜியமாக்கப்பட்டு இருக்கின்றன.

வர்த்தகம் ரூ.60,000 கோடியாக அதிகரிக்கும்

இதனால் இரு​ நாடு​களுக்​கு இடையி​லான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படு​கிறது.

இந்த ஒப்​பந்​தம் ஜவுளித் துறை, ரத்​தினங்​கள் மற்​றும் நகைகள், மருந்​துத் துறை, வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் போன்ற முக்​கிய துறை​களுக்கு பெரும் நன்​மை​களை வழங்​கும்.

இந்தியாவும் வரி குறைப்பு

இந்தியா தனது சந்தையில் 90% இங்கிலாந்து பொருட்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கிக்கான வரி 150-லிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் வாகனங்களுக்கான இறக்குமதி வரியும் படிப்படியாகக் குறைக்கப்படும்.

சமையல் கலைஞர்​கள், யோகா பயிற்​சி​யாளர்​கள் போன்ற தொழில்​முறை நிபுணர்​கள் எளி​தான பயண வசதி​கள் மற்றும் விசா சலுகைகளால் பயன்​பெறலாம்.

பரஸ்பரம் வரிகள் குறைப்பு

இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து விதிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான 70% வரையிலான வரிகள், கடல்சார் பொருட்கள் மீதான 21%-க்கும் அதிகமான வரிகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதான 18 சதவீத வரிகள்...

தோல் மற்றும் காலணி தயாரிப்புகள் மீதான 16 சதவீதம் வரையிலான வரிகள் மற்றும் ஜவுளி வகைகள் மீதான சுமார் 12 சதவீத வரிகள் ஆகியவை பூஜ்ஜியமாக குறைக்கப்படும்.

இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கும்.

வரி இல்லாத ஏற்றுமதி

20,000 முதல் 80,000 பவுண்டு வரையி​லான விலை வரம்பில் உள்ள இந்​திய மின்​சார, ஹைபிரிட் மற்​றும் ஹைட்​ரஜன் பயணி​கள் கார்​களுக்​கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்​லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும்.

இதன் மொத்த ஒதுக்​கீடு 15-வது ஆண்​டில் 88,000 யூனிட்​டு​களாக உயர்ந்​து, அடுத்​தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.

11½ லட்சம் கோடி இலக்கு

இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது. . இந்த ஒப்பந்தம் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.11½ லட்சம் கோடி ($120 பில்லியன் டாலர்) அளவுக்கு இரட்டிப்பாக்கும் இலக்கை கொண்டதாக இருக்கிறது.

====================