"There is no need to politicize women's reservation" - PM Modi's speech in Lok Sabha  google
இந்தியா

“மகளிர் இடஒதுக்கீடு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை” -மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மகளிர் இடஒதுக்கீடு குறித்து அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Rohini

மக்களவையில் பிரதமர் உரை

நாட்டின் மக்கள் தொகையில் 50% உள்ள பெண்கள், முடிவெடுக்கும் இடங்களில் பங்கேற்பது காலத்தின் கட்டாயம் என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பெண்களுக்கான உரிமையை எதிர்த்தவர்களை அவர்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு அரசியல் சாயம் பூச வேண்டாம்

மேலும் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்

எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது

இந்த மூன்று மசோதாவில் எந்த மாநிலங்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவம் மாறாது என்றும் தெரிவித்த மோடி ,ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களுக்கான இந்த உரிமையை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து உரையாடிய மோடி கூறியதாவது

பெண்களுக்கான இட ஒதுக்கீடு நாட்டின் ஜனநாயகத்துக்குச் சாதகமாக அமையும். நாட்டின் கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைக்கு வலுசேர்க்கும். மேலும், இதற்கான பெருமை நம் அனைவருக்கும் உரித்தானதாக இருக்கும். இதற்கான முழு உரிமையும் ஆளுங்கட்சிக்கோ அல்லது மோடிக்கோ மட்டும் உரியதல்ல என்றும்

அதேபோல, இங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களுக்கு மட்டும் உரியதல்ல. இதற்கு ஒரு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று பிரதமர் மோடி உரையாடினர்.

நாளை மாலை வாக்கெடுப்பு

இந்த மூன்று மசோதாக்களுக்கான வாக்கெடுப்பு நாளை மாலை மக்களவையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக மற்றும் , காங்கிரஸ் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

==============