Tirupati Temple set record by selling 13 crore 95 lakh laddus in last financial year google
இந்தியா

TTD ஒரே ஆண்டில் 13 கோடியே 95 லட்சம் லட்டுகள் விற்பனை : திருப்பதி தேவஸ்தானம் சாதனை : ரூ.567 கோடி வருவாய்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த நிதி ஆண்டில் 13 கோடியே 95 லட்சம் லட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Kannan

திருப்பதி ஏழுமலையான் கோவில்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி- திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.

அப்படி வரும் பக்தர்கள் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

300 ஆண்டுகள் பாரம்பரியம்

திருப்பதியில் லட்டு பிரசாரம் என்பது 300 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டது.

2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் மொத்தம் 13,95,43,231 லட்டுகள், பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

13 கோடியே 95 லட்சம் லட்டுகள் விற்பனை

முந்தைய ஆண்டில் லட்டு விற்பனை 12.18 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது, சுமார் 1.76 கோடி லட்டுகள் கூடுதலாக விற்பனை ஆகி இருகின்றன.

ஒரு நாள் சாதனை

2025 டிசம்பர் 27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 5,13,000 லட்டுகள் விற்பனையாகியது. 10 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம் இது ஆகும்.

ரூ.567 கோடி வருவாய்

கடந்த நிதி ஆண்டில் லட்டு விற்பனை மூலம் மட்டும் தேவஸ்தானத்திற்கு சுமார் 567 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு

கடந்த நிதி ஆண்டில் பக்தர்கள் வருகை என்பது 2.70 கோடியாக இருந்தது. லட்டு விற்பனை அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் பொருட்களின் தரம் மேம்படுத்தப்பட்டதால் பக்தர்கள் மத்தியில் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

தினமும் 4 லட்சம் லட்டுகள்

தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. தயாரிப்பு அதிகரிப்பும் விற்பனை உயரக் ஒரு காரணமாக உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கு தலா ஒரு லட்டு இலவசமாக, பெருமாள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கூடுதல் லட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் ஒரு லட்டுக்கு 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

====