To help waiting passengers, Indian Railways has decided to prepare the schedule 10 hours before the train departs 
இந்தியா

காத்திருப்பு பயணிகளுக்கு குட்நியூஸ் : 10 மணி நேரம் முன்பே அட்டவணை

காத்திருப்பு பயணிகளுக்கு கைகொடுக்கும் வகையில், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அட்டவணையை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

Kannan

ரயில் முன்பதிவு பட்டியல்

Indian Railways has revised reservation chart preparation timings, allowing passengers to know their ticket confirmation status up to 10 hours before departure : இந்திய ரயில்வேயில் இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனால் காத்திருப்பு பட்டியலில் இருப்போர் நான்கு மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே தங்களுக்கு சீட் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடிகிறது.

இதன்காரணமாக, மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக, தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த குறையை போக்கும் விதமாக, ரயில்கள் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே முன்பதிவு பட்டியலை வெளியிட ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

10 மணி நேரம் முன்பு முன்பதிவு பட்டியல்

அதன்படி, காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல், முந்தைய நாள் இரவு 8:00 மணிக்குத் தயார் செய்யப்படும்.

மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்பட்டு விடும்.

பயணிகளுக்கு நல்வாய்ப்பு

காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் செக் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று சரிபார்க்கலாம். அல்லது உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை 139 அல்லது 5676747 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி தங்களுக்கு சீட் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம்

எந்தவொரு போனிலும் 139 என்ற எண்ணை அழைத்து நிலையை அறியலாம். இந்த மாற்றத்தால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் தங்கள் டிக்கெட் நிலையை முன்கூட்டியே அறிந்து, பயணத் திட்டத்தை எளிதாக மாற்றியமைத்து கொள்ளம முடியும்.

யாரும் மோசடி செய்ய முடியாது

கடந்த ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், யாரும் மோசடி செய்யவும் முடியாது.

ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே முக்கியமான இந்த மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது.

ரயில் பயணிகளுக்கு நிம்மதி

இந்த புதிய நடைமுறையால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். கடைசி நிமிடம் வரை பதற்றத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை குறையும். டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், மாற்று பயணத்திற்கு பேருந்து அல்லது வேறு ரயில் சேவைகளைத் தேர்வு செய்ய போதுமான நேரம் கிடைக்கும்.

முன்பதிவில் வெளிப்படை தன்மை

தொலைதூர பகுதிகளில் இருந்து பயணம் தொடங்கும் பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தை மேலும் தெளிவாகவும் ஒழுங்காகவும் அமைத்துக் கொள்ள முடியும். இதனால் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் 2வது அட்டவணை

இந்த மாற்றம் தொடர்பாக ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. முதல் அட்டவணை தயாரிக்கப்பட்ட பிறகு இடங்கள் காலியாக இருந்தால், வழக்கம்போல் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை இரண்டாவது அட்டவணை (இரண்டாவது விளக்கப்படம்) தயாரிக்கும் நடைமுறை தொடரும்.

=====