India Top Philanthropists List 2025 Shiv Nadar leads First Hurun list know how much Rohini Nilekani Donation in Tamil Google
இந்தியா

செல்வந்தர்களின் நன்கொடை பட்டியல் 2025 வெளியீடு! முதலிடம் யார்?

India Top Philanthropists List 2025 in Tamil : நாட்டின் பெரும் செல்வந்தர்கள் நற்பணிக்கென கொடுத்த நன்கொடை பல்லாயிரம் கோடிகளை தொட்டுள்ளது என இந்திய பிலான்தெரவி நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Bala Murugan

செல்வந்தர்கள் நன்கொடையால் சமூகத்தில் மாற்றம்

India Top Philanthropists List 2025 in Tamil : நாட்டின் பெரும் செல்வந்தர்களிடம் நற்பணிகளுக்காக கொடுக்கும் மனம், முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது.அதன்படி உலகளவில் பல்வேறு நற்செயல்களுக்கு தங்களது பணத்தை செல்வந்தர்கள் வாரி இறைத்து வருகின்றனர். நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளவர்கள் முன்வந்து நன்கொடை வழங்குவதை பார்த்து சாமானியர்கள் பலரும் இதில் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து மனிதத்தை உயர்த்தி வருகின்றனர்.

நன்கொடையில் ஷிவ்நாடார் முதலிடம்

கடந்த நிதியாண்டில் மொத்தம் 10,380 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். ஹுருன் இந்தியா நிறுவனத்தின் 'எடெல்கிவ் ஹுருன் இந்தியா பிலான்தெரபி' தரவரிசை பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.40 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, எச்.சி.எல்., நிறுவனத்தின் ஷிவ் நாடார் இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இவர், மொத்தம் 2,708 கோடி(Shiv Nadar Donation 2025 Tamil) ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை, ஷிவ் நாடாரே முதலிடம் பிடித்துள்ளார்.

எடெல்கிவ் ஹுருன் இந்தியா பிலான்தெரபி நிறுவனம் வெளியிட்டுள்ள நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல்

முக்கிய விபரங்களும், 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை வழங்கிய 191 பேர் யார் இனவும் பட்டியலை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

85 சதவீதம் நன்கொடை அதிகம்

அதில் புதிதாக, 12 பேர் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் 24 பேர் இடம்பிடித்துள்ளனர். * மொத்த நன்கொடை மதிப்பு கடந்த மூன்று நிதியாண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 விட 180 சதவீதம் உயர்வு

அதிக நன்கொடை வழங்கிய நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது. இதன் நிறுவனர்கள், குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 850 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர். ஜெரோதாவின் நிகில் காமத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இளம் நன்கொடையாளராக நீடிக்கிறார். டாப் 25 நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான வரம்பு, 70 கோடி ரூபாயாக அதிகரிப்பு: கடந்த 2014ஐ விட 180 சதவீதம் உயர்வு. டாப் 25 நன்கொடையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் வழங்கினர். இது தினசரி 46 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், நன்கொடை வழங்கியவர்களுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெண்களில் ரோஹிணி முதலிடம்

பெண்களில் ரோகிணி நீலேகனி முதலிடம் கடந்த நிதியாண்டில், 204 கோடி ரூபாய் வழங்கிய ரோகிணி நீலேகனி(rohini nilekani philanthropies 2025), பெண் நன்கொடையாளரில் முதலிடம் பிடித்துள்ளார். 65 வயதாகும் இவர், அக்ஷரா பவுண்டேஷன் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹினிக்கு பாராட்டு

துவக்க கல்வியில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. அர்க்யம் என்ற அறக்கட்டளை வாயிலாகவும் குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்கு ரோஹிணி தீர்வு கண்டு வருகிறார். ஆதார் அமைப்பின் தலைவராக இருந்த நந்தன் நிலேகனியின் மனைவியான இவர், எழுத்தாளர் ஆவர். பெண்கள் கணக்கீட்டில் நன்கொடை பட்டியலில் முதலிடத்தை பிடித்து வரும் ரோஹிணி அவர்களுக்கு, தமிழகம் முதல் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.