வந்தே பாரத் குறித்து மணம் திறந்த அஸ்வினி வைஷ்ணவ்
Railway Minister Ashwini Vaishnaw on 164 Vande Bharat Express Train : இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல புதிய ரயில்கள் சேவையாற்றுகின்றன. நாட்டின் ரயில்வே இணைப்பு சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
குறைந்த கட்டணத்தில் வந்தே பாரத்
இதுகுறித்து பேசிய அவர். மிகக் குறைந்த கட்டணம், வெறும் 2.19 ரூபாய் மட்டுமே வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 2.19 ரூபாய் மட்டுமே என அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 300 முதல் 400 கி.மீ பயணிக்கும் பயணிகளுக்கு இது பொருந்தும்.
பிற நாடுகளை விட இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவு
முக்கிய நாடுகளை விட மிகவும் குறைவு இந்தியாவின் வந்தே பாரத் ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒரு கி.மீக்கு ரூ.2 முதல் ரூ.20 வரை உள்ளது.சாதாரண ரயிலின் சராசரி கட்டணம் சாதாரண ரயில்களின் கட்டணம் அண்டை நாடுகளை விட இந்தியாவில் குறைவு.
இங்கு ஒரு கி.மீக்கு 20 பைசா. பாகிஸ்தானில் 54 பைசா, வங்கதேசத்தில் 37 பைசா, இலங்கையில் 51 பைசா என உள்ளது.
164 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்
வந்தே பாரத் சேவை இந்தியாவில் 84 வழித்தடங்களில் 164 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையாற்றுகின்றன.
2019-ல் தொடங்கப்பட்ட இந்த சேவை மிகவும் வெற்றிகரமாக உள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.