சபரிமலை ஐயப்பன் கோவில்
கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவில், வனப்பகுதியில், பெரியார் புலிகள் காப்பக பகுதியில் அமைந்து இருக்கிறது.
புலிகள் காப்பத்தில் கோவில்
அப்பகுதியில், மக்கள் நடமாட்டம், கடுமையான வெடிச்சத்தமும் அதிர்வுகளும் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பதாக வனத்துறை தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
வெடிகளை சேமித்து வைப்பதால் பிரச்சினை
மேலும், சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதிகளில் அதிக அளவில் வெடிமருந்துகளை சேமித்து வைப்பதும் கையாளுவதும் பாதுகாப்பு குறைபாடுகளையும் விபத்து அபாயங்களையும் ஏற்படுத்தும் என காவல்துறையும் அரசின் பல்வேறு துறைகளும் எச்சரித்திருந்தன.
ஒட்டுமொத்த பாதுகாப்பு பரிசீலனை
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கேரள அரசும் தேவஸ்தானமும் இணைந்து இந்த வெடி வழிபாட்டை நிறுத்தியுள்ளன.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வெடி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
சபரிமலையில் வெடி வழிபாடு நடத்துவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது எல்லாம், இதற்காக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கு பக்தர்கள் பணம் செலுத்தியதும், 600 மீட்டர் தொலைவில் வெடிகள் வெடிக்கப்படும்.
பணம் கொடுத்து வெடிகளை வெடிக்கலாம்
லட்சக் கணக்கில் வரும் பக்தர்கள் வெடி வழிபாட்டிற்கு பணம் செலுத்தும் போது, பகல் முழுவதும் வனப்பகுதியில் வெடிச் சத்தம் கேட்டவாறே இருக்கும். இதை தடுக்கவே தற்போது, இந்த வழிபாட்டிற்கு திருவிதாங்கூர் தேவசம் தடை விதித்து இருக்கிறது.
அடுத்து வர இருக்கும் மண்டல பூஜை காலத்தில், சபரிமலையில் வெடிச் சத்தம் இருக்காது, இது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.
====================