TVK govt's approach regarding lighting Karthigai lamp on deepa thoon*, now faces stringent court action  source:thamizhalai,ai generated
இந்தியா

”நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு” : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு : கடுமையான அவமதிப்பு..!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கடுமையான நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கு.

Kannan

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

திருப்பரங்குன்றம் மலையின் மேல் பகுதியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிக்கந்தர் பாதுஷா தர்கா

கல் தூணுக்கு அருகில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்திருப்பதால், சட்டம்-ஒழுங்கு மற்றும் வழிபாட்டு உரிமைய்யை காட்டி தர்கா நிர்வாகம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அங்கு தீபம் tற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்துக்களின் கோரிக்கை

ஆனால், இந்தத் தூண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்றும், தீபம் ஏற்றுவது பாரம்பரிய நடைமுறை என்றும் கோயில் நிர்வாகம் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்படுகிறது.

உத்தரவை நிறைவேற்றாத முந்தைய திமுக அரசு

2025ம் ஆண்டில் தொடங்கிய இந்த வழக்கில், கடந்த திமுக ஆட்சியின் போது தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை கடைபிடிக்காத ஸ்டாலின் அரசு, வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றியது.

இருநீதிபதிகள் அமர்வு உத்தரவு

இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தூண் கோயில் நிலத்தில் இருப்பதாகவும், கோயில் குழுவினர் மட்டுமே சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் கடந்த 20ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் அமர்வு, நவம்பர் 24 அதாவது கார்த்திகை தீபத் திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற தற்காலிகமாக, இந்த ஆண்டு மட்டும் அனுமதி வழங்கியது.

பல்வேறு நிபந்தனைகளும் விதிப்பு

பொதுமக்கள் உடன் செல்லக் கூடாது, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, தொல்லியல் துறை (ASI) மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்புடன் கோயில் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

தடை உத்தரவு, போலீசார் குவிப்பு

இந்த உத்தரவை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்த தவெக அரசு, மலையை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தியது. சுமார் 7 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உயர் நீதிமன்ற கிளை விசாரணை

144 தடை உத்தரவு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் 'ஜான் டோ' (John Doe) உத்தரவை பிறப்பித்தது.

'ஜான் டோ' (John Doe) உத்தரவு என்பது அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது எதிர்காலத்தில் சட்டமீறலில் ஈடுபடக்கூடிய பெயர் அறியாத தரப்பினருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒரு தற்காலிகத் தடை உத்தரவாகும்.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் - தமிழக அரசு வாக்குறுதி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளதாக நீதிபதிகள் திட்டவட்டமாகக் சொன்னாங்க.

அதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்,

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என நீதிபதிகள் முன்பு உறுதி அளித்தார்.

உத்தரவை மீறிய தவெக அரசு

ஆனால், அளித்த வாக்குறுதியை மீறும் வகையில், நேற்று மாலை 6 மணியளவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை; மாறாக, வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

திமுக vs தவெக செயல்பாடு

இதுல கடந்த ஆண்டு திமுக அரசும் நடந்துகிட்ட விதத்துக்கும், இப்போது தவெக அரசு செயல்பட்டு இருக்கிற முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

திமுக ஆட்சியின்போது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த பிறகும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. ஆனால், அப்போது திமுக அரசு தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருந்தது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாது, வழக்கமான இடத்தில்தான் ஏற்றுவோம். என்பதை நீதிமன்றத்திற்கு உள்ளேயும், மனுதாரர்களிடம் வெளியேயும் திமுக அரசு வெளிப்படையாகவே கூறியது.

வாக்குறுதியை மீறிய அரசு

ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. யர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம், தீபம் ஏற்றுவோம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி விட்டு, நீதிமன்றத்தில் உத்தரவை மதிப்பது போலக் காட்டிக் கொண்டது.

மறுபுறம் வழக்கமான இடத்திலேயே தீபத்தை ஏற்றிவிட்டு, பாரம்பரிய வழக்கப்படியே தீபம் ஏற்றப்பட்டது என தமிழக அரசு விளக்கம் கொடுத்து இருக்கு.

கடுமையான குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக எதிர்ப்பதை விட, நீதிமன்றத்தில் செயல்படுத்துகிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதனைச் செய்யாமல் ஏமாற்றுவது மிகவும் கடுமையான குற்றமாகக் கருதப்படுது.

தவெக அரசுக்கு சிக்கல்

நீதிபதிகளிடம் பொய்யான வாக்குறுதி அளித்து நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நேரடியாக மீறியது ஆகிய இரட்டைக் குற்றச்சாட்டுகள் இப்போது தவெக அரசுக்கு எதிராகத் திரும்பி இருக்கு.

உத்தரவைச் செயல்படுத்தியது குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

எனவே, தவெக அரசும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் மிகக் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கு.

நீதிமன்றத்துல வாக்குறுதி அளிச்சுட்டு, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கையோட காத்திருந்த இந்துக்களோட உணர்வுகளையும் தவெக அரசு புண்படுத்தி இருக்கு.

இந்துக்களை ஏமாற்றிய அரசு

இதுக்கு இந்து அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிச்சு இருக்கிற நிலையில், வழக்கம் போல, தவெக கூட்டணி கட்சிகள் தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு வரவேற்பு தெரிவிச்சு இருக்கின்றன.

திமுக அரசோ தனது நிலைப்பாட்டில் தெளிவா இருந்து உறுதியா நின்றது. ஆனால், தவெக அரசோ வாக்குறுதி கொடுத்துட்டு ஏமாற்றி இருக்கு. பொதுமக்களோட கடுமையான அதிருப்தி, நீதிமன்றத்தொட அவமதிப்பு என இனி தவெக அரசு நெருக்கடிகள சந்திக்க போகுது.

=========================