Uniform Civil Code: To be implemented in West Bengal, says Suvendu Adhikari.  google
இந்தியா

பொதுசிவில் திட்டம் : மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படும் : முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு...!

குஜராத், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Rohini

இதர மாநிலங்களைப்போலவே மேற்குவங்கத்திலும் அமலப்டுத்தப்படும் ,முதல்வர்

இதர மாநிலங்களான குஜராத், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி இது குறித்து கூறும்போது

“மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதை சட்டப்பேரவையில் நான் விளக்குவேன்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடமுறையை போன்று இங்கு கொண்டுவரப்படும் ,அது குறித்து விரைவில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

மம்தா பானர்ஜி அரசை சாடிய சுவேந்து அதிகாரி

தொடர்ந்து பேசிய சுவேந்து அதிகாரி ,மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசில் ஊழலும், வாரிசு அரசியலும்தான் மேற்கு வங்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன என்று முந்தைய அரசையும் சாடினார்

வந்தே மாதரம் , தேசிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

 வந்தே மாதரம் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தேசிய அளவிலான அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது குறித்தான தகவல்களையும் பட்ஜெட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்

இதர மாநிலங்களை சுட்டிக்காட்டி சிவில் சட்டம்

நம் நாட்​டில் பொது சிவில் சட்​டம் தற்​போது கோவா, உத்தராகண்ட், குஜ​ராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதி​காரப்​பூர்​வ​மாக நடை​முறை​யில் உள்​ளது அல்லது சட்​ட​மாக இயற்​றப்​பட்​டுள்​ளதாகவும் , அதனை கட்டமைக்க பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார் ,

==================