Union Budget 2026 - 27 presented in Parliament, announced that there will be no change in personal income tax rate Google
இந்தியா

வருமான வரி விகிதம் மாற்றமில்லை:தவறான தகவல் கொடுத்தால் 100% அபராதம்

Union Budget 2026-27 on Income Tax : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

Union Budget 2026-27 on Income Tax No change rates, slabs : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் வரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றை பார்ப்போம்.

* ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்

* தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை

* தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம்.

* வருமான வரி மறு மதிப்பீடுகளை சமர்பிக்க மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்.

* வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் யில்:

* இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047ஆம் ஆண்டு வரை வரி கிடையாது.

* பங்குகளை திருப்பி வாங்கும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பு

* வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக்களை விற்கும்போது செலுத்த வேண்டிய வருமான வரி குறைப்பு

* உள்நாட்டில் பயிற்சி விமானங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு சுங்க வரி நீக்கம்

* கடல்சார் ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்ய, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகை உயர்வு

* சோலார் பேனல் கண்ணாடிகளை உற்பத்தி செய்ய பயன்படும் சோடியத்திற்கு முழு வரி விலக்கு.

* காலணிகள் ஏற்றுமதி செய்வோர், மூலப் பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.

* ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

* புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி

* அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதிக்கான

வரிகள் நீக்கம்

* மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், லித்தியம் பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லை

* குறிப்பிட்ட சில மின்னணு சாதனங்களுக்கு ஆலையிலேயே சுங்கச் சோதனை நடத்தி ஏற்றுமதி அனுமதி

* ஆழ்கடல், பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் பிடிக்கப்படும் மீன்களுக்கு முழு வரி விலக்கு

* விபத்து காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு