Union Budget 2026-27: Sitharaman announces 'Mahatma Gandhi Handloom scheme' : flags reform push in textile industry : 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், அதில் இடம்பெற்று இருக்கும் அம்சங்கள் வாசித்தார்.
* புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
* நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
* சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை உள்ளிட்ட அதிவேக ரயில் சேவைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
* பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்
* ஆயுர்வேத பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முன்னுரிமை.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10%ல் இருந்து 24% ஆக அதிகரிப்பு
* சுற்றுலா துறையை மேம்படுத்த நாடு முழுவதும் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சிறப்பு பயிற்சி
* 2026-27ம் ஆண்டில் 16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.
* ஆதிச்ச நல்லூரில் மத்திய அரசு சார்பில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
* 2026ல் உலக புலிகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
* பழவேற்காடு ஏரிகளை பறவைகளை கண்காணிக்க மூன்று உயர் கோபுரங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திய பெருக்க 500 நீர்தேக்கங்கள் மேம்படுத்தப்படும்.
* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம்
* பால் உற்பத்தி, கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் தொடங்கப்படும்.
* தென்னை விவசாயத்தில் போட்டியை அதிகரிக்க புதிய ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
========