Union Budget, the red bag comes to mind. What is this tradition? What does the red color symbolize? Let's take a look... 
இந்தியா

Union Budget 2026 : ”பட்ஜெட், சிவப்பு பை” : சுவாரஸ்ய பின்னணி

Union Budget 2026-27 : மத்திய பட்ஜெட் என்றாலே சிவப்பு நிறப் பை தான் நினைவுக்கு வரும். இந்த பாரம்பரியம் என்ன? சிவப்பு நிறம் எதைக் குறிக்கிறது? வாங்க பார்க்கலாம்...

Kannan

இந்திய பட்ஜெட் 2026 - 27 :

Union Budget using a traditional red pouch, known as a bahi-khata, This marked a significant departure from the British-era tradition :140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கும் வளர்ச்சி பெட்டகம் தான் மத்திய பட்ஜெட். இது ஒரு சிவப்பு நிற பையில் வைக்கப்பட்டு, நிதி அமைச்சரால் கொண்டு வரப்படுகிறது.

சிவப்பு பையில் மத்திய பட்ஜெட் :

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தில், நிதியமைச்சராக இருப்பவர் கையில் அந்த சிவப்பு பையுடன் நாடாளுமன்றம் நோக்கி நடக்கும் காட்சி, ஒரு சடங்காகவே பார்க்கப்படுகிறது. இந்த சிவப்பு பை எதற்காக? இது வெறும் வழக்கமா? அல்லது ஆழமான வரலாறா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

ஆங்கிலேயர்களின் சிவப்பு நிறம்

சிவப்பு நிறத்துக்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு சுதந்திர இந்தியாவில் தொடங்கியது இல்லை. அதன் வேர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உள்ளன. செல்கின்றன.

அதிகாரத்தின் சாட்சி சிவப்பு நிறம்

சிவப்பு நிறம் என்பது அதிகாரம், பொறுப்பு, ஆட்சி ஆகியவற்றின் அடையாளமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கருதப்பட்டது. முக்கியமான அரசு ஆவணங்கள், அரசின் நிதி விவரங்கள் போன்றவை சிவப்பு நிற உறையில், பெட்டியில் வைத்துச் செல்லப்பட்டன.

அந்த வழக்கமே, இந்தியாவிலும் பட்ஜெட் ஆவணங்களுக்கு சிவப்பு நிறத்தை இணைத்து, இன்று வரை கம்பீரத்தின் அடையாளமாக உள்ளது.

1860 - இந்தியாவில் முதல் பட்ஜெட்

இந்தியாவில் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நாடு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் நிர்வாக மரபுகள் இங்கேயும் பின்பற்றப்பட்டன.

நடைமுறை மாறாத பின்னணி

பட்ஜெட் ஆவணங்களை சிவப்பு நிற பெட்டியில் வைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் தொடங்கியது. காலம் மாறினாலும், அந்த நடைமுறை மட்டும் இன்று வரலாற்று அடையாளமாக தொடர்கிறது.

சிவப்பு நிறத்தின் கம்பீரம்

சிவப்பு வெறும் வண்ணம் மட்டும் கிடையாது. வல்லமை, கம்பீரம், மிகப்பெரிய பொறுப்பு ஆகியவற்றைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

நாட்டின் வருமானம், செலவுகள், எதிர்காலத் திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கிய ஆவணம் என்பதால், பட்ஜெட்டுக்கு இந்த நிறம் பொருத்தமானதாகக் கருதப்பட்டது.

சிவப்பு கோப்பில் பட்ஜெட் ஆவணங்கள்

ஆனால், 2019ம் ஆண்டு ஒரு மாற்றம் வந்தது. சிவப்பு பெட்டிக்கு பதிலாக, சிவப்பு நிற கோப்பில் பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. இது காலனித்துவ நினைவுகளை விட்டு விலகி, புதிய அடையாளத்தை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியாக பார்க்கப்பட்டது.

அடையாளம் சிவப்பு

அந்த மரபின் வழியில் பிப்ரவரி முதல் தேதி அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவப்பு நிற கோப்பில் பட்ஜெட் ஆவணங்களுடன் நாடாளுமன்றத்தில் வந்து நிதிநிலை அறிக்கையை வாசிப்பார்.

=========================