ரயில்வே வழித்தடங்கள்
இந்திய ரயில்வே வலையமைப்பை வலுப்படுத்தவும், ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மேற்கு வங்கம், ஒடிஸா, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் 410 கி.மீ நீளத்துக்கு 4 முக்கிய பல வழித்தட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் ரூ.9,450 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டங்களை, 2030-31-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி - கூடூர் ரயில் வழித்தடம்
இதில் சென்னை - கொல்கத்தா முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ள மிக முக்கியப் பிரிவாக கும்மிடிப்பூண்டி - கூடூர் வழித்தடம் உள்ளது.
3, 4வது புதிய ரயில் பாதைகள்
90 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில், ரூ.2,229 கோடி மதிப்பீட்டில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
60 பேர் பயன்பெறுவர்
நான்கு ரயில்வே திட்டங்களின் மூலம் 6,448 கிராம மக்கள் (சுமார் 60 லட்சம் பேர்) நேரடியாகப் பயனடைவார்கள். வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பு களும் அதிகரிக்கும்.
சரக்கு போக்குவரத்து எளிதாகும்
நிலக்கரி, இரும்புத் தாது, சிமென்ட், எஃகு,வாகனங்கள் மற்றும் உணவு தானியங்கள் விரைவாகக் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 76 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாள முடியும்.
எரிபொருள் பெருமளவில் சேமிப்பு
ரயில் போக்குவரத்து அதிகரிப்பதால் நாட்டின் தளவாடச் செலவு குறைந்து, சுமார் 13 கோடி லிட்டர் எரிபொருள் இறக்குமதி தவிர்க்கப்படும்.
மேலும், 65 கோடி கிலோ கார்பன் உமிழ்வு குறைக்கப்படும். இது 2.60 கோடி மரங்களை நடுவதற்குச் சமமாகும்.
ரயில் பயண நேரம் குறையும்
புதிய வழித்தடங்கள் வருவதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் பயண நேரத்தைக் குறைத்து, ரயில் சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
================