Union Cabinet approves 3 chemical industrial parks worth Rs 3,030 crore. ai generated
இந்தியா

”3030 கோடியில் 3 ரசாயன தொழிற் பூங்காக்கள்” : மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உள்கட்டமைப்பு வசதி, ரூ.3000 கோடி ஒதுக்கீடு..!

இந்த திட்டமானது நடப்பு நிதியாண்டு முதல் 2030-2031 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

Rohini

3 ராசாயண தொழிற்பூங்கா, அமைச்சரவை ஒப்புதல்

மழைக்கால கூட்டத்தொடரானது நடைப்பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவையில் விவாதமானது மேற்கொள்ளப்பட்டது.

2000 ஏக்கர் பரப்பளவில் மூன்று பெரிய ரசாயனப் பூங்காக்.களை அமைப்பதற்கு ரூ.3030கோடி மதிப்பிலான புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் நாட்டில் மூன்று பிரத்யேக ரசாயன பூங்காக்களை அமைப்பதற்காக பாரத் தொழிலக விகாஸ் யோஜனா ரசாயன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்பூங்கா திட்டம் , 3030 கோடி நிதி ஒதுக்கீடு

அமைச்சரவையில் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு , 2026-2027 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.3030கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

உள்கட்டமைப்பு வசதிகாக ரூ 3000 கோடி ஒதுக்கீடு

இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி பூங்காக்களுக்குள் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை பயன்பாட்டு வசதிகளை அமைப்பதற்கான செலவுகளுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள ரூ.30கோடி நிர்வாக செலவுகளுக்காக பயன்படுத்தப்படும்.

இந்த திட்டமானது நடப்பு நிதியாண்டு முதல் 2030-2031 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்று கூட்டத்தொடர் அமைச்சர்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய தொழிற்பூங்காக்கள் குறித்து அறிக்கை

மாநில அரசுகள் மூலம் சவால் முறை அடிப்படையில் மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்குவதற்கு அரசு வழிவகை செய்யும். இத்தகைய ஒவ்வொரு பூங்காவும் குறைந்தபட்சம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட எந்தவித சட்ட சிக்கலும் இல்லாத நிலத்தைக் கொண்டிருக்கும்.

ஒரு பூங்காவிற்கு ஒன்றிய அரசு ரூ.1000 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கும்.

மாநில அரசுகளின் பங்களிப்பு

எனினும் இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு குறைந்தபட்சம் ரூ.500கோடி பங்களிப்பாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பூங்காவிலும் ரூ.20ஆயிரம் கோடி முதல் ரூ.50ஆயிரம் கோடி வரையிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம்.

மூன்று பூங்காக்களை அமைப்பது இந்திய ரசாயனத்துறையை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பல்லாரி- குண்டக்கல் வழி புதிய ரயில் திட்டம்

மேலும் அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள பல்லாரி- குண்டக்கல் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி தேசிய முதன்மைத் திட்டத்தின் கீழ் ரூ.1264கோடியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.

=========================