Union Cabinet is reshuffled soon Prime Minister Modi has met with the President to discuss this matter google
இந்தியா

குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு : மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைப்பு : புது முகங்களுக்கு வாய்ப்பு..!

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும், இதற்காக குடியரசு தலைவரை பிரதமர் மோடி சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Kannan

மத்திய இணை அமைச்சர் ராஜினாமா

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை இணை அமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

ரயில்வே இணை அமைச்சராக உள்ள ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. அவருக்கும் மீண்டும் ராஜ்யசபா சீட் தரப்படாததால், ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்.

12 ஆண்டுகள் நிறைவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி இருக்கிறார்.

பாஜகவில் அமைப்பு ரீதியில் மாற்றம்

பாஜகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ் நாட்டுக்கு 27ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அமைச்சரவையில் புதுமுகங்கள்

மூத்த அமைச்சர்கள் சிலரை கட்சிப் பணிக்கு அனுப்பவும், அமைச்சரவையில் புது ரத்தம் பாய்ச்சவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

============================