Union Education Minister should resign, protest will continue in Delhi, CJP party announces  google
இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் "டெல்லியில் போராட்டம் தொடரும்" , cjp கட்சி அறிவிப்பு

சமீபத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ,நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து டெல்லியில் ஆர்பாட்டம் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

Rohini

இந்தியா திரும்பிய cjp கட்சியின் தலைவர்

அரசு மீது விரக்தியடைந்த கட்சியாக தன்னை முன்னிறுத்து உள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ,இக்கட்சியை நிறுவிய அபிஜித் தீப்கே என்பவர் மேற்படிப்புக்காக வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் , தற்போது இந்தியா திரும்பியுள்ளார்

டெல்லியில் போரட்டத்தை அறிவித்த cjp கட்சி

இக்கட்சியை தொடங்கியவர் இந்தியா திரும்பிய நிலையில், தலைநகர் டெல்லியில் இவரது தலைமையில் போரட்டமாந்து நடைப்பெற்றது , இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர்க்கு எதிராக முழக்கங்களையும் எழுபினர்

நீட் , சிபிஎஸ்சி தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE) உள்ளிட்ட தேர்வுத் தாள் கசிவு (Paper Leak) விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராடி வருகின்றனர். அந்த நிலையில்

டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்திய 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party - CJP) நிறுவனரான அபிஜித் திப்கே, மத்திய அரசுக்கு மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்

இது குறித்து வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதவது

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் சனிக்கிழமைக்குள் (ஜூன் 13, 2026) தனது பதவியை விட்டு விலக வேண்டும். மீறினால இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் பாயும்" என எச்சரிகை விடுத்துள்ளார்

பிளான்-பி' அடுத்த நடவடிக்கையாக இருக்கும் ;cjp எச்சரிக்கை

ஒருவேளை மாநில அளவிலான போராட்டங்களுக்குப் பிறகும் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காவிட்டால், தங்களிடம் 'பிளான்-பி' தயாராக இருப்பதாக CJP அறிவித்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் பதவி விலகாத பட்சத்தில், நான் தனிப்பட்ட முறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் நேரடியாகச் சென்று போராட்டங்களை ஒருங்கிணைக்க உள்ளேன் என்று அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்

தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக ஒன்றிணைவோம் : cjp

அமைச்சர் பதவி விலகவில்லை என்றால், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் மூலை முடுக்கில் இருக்கும் 1 கோடிக்கும் அதிகமான பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து,

மீண்டும் நாட்டின் தலைநகரான புது டெல்லியில் களம் காண்போம். அந்தப் போராட்டம் முற்றிலும் அமைதியான முறையில், ஆனால் மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் அபிஜித் தீப்கே

அனைத்து தேர்வு குளறுபடிகளுக்கும், கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

நீட் தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்கள், சிபிஎஸ்இ (CBSE), கியூட் (CUET) மற்றும் எஸ்எஸ்சி (SSC) தேர்வுகள் என ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் நிலையில் இது அனைத்திற்கும் முழுப் பொறுப்பை கல்வி அமைச்சரே ஏற்க வேண்டும் என் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது

நிதர்சனமான மாணவர் இயக்கமாக cjp கட்சி உருவெடுத்துள்ளது

கடந்த மே 16 அன்று வெறும் ஒரு 'இன்டர்நெட் மீம்' (Internet Meme) ஆகத் தொடங்கப்பட்ட இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி', இன்று சோனாம் வாங்சுக், மஹுவா மொய்த்ரா போன்ற முக்கிய ஆளுமைகளின் கவனத்தை ஈர்த்து, ஒரு பெரும் திரளான நிதர்சனமான மாணவர் இயக்கமாக மாறும் வகையில் உருவெடுத்துள்ளது.

=====================