unprecedented voting taking place in Puducherry is awe-inspiring google
இந்தியா

Puducherry Polling : வரலாறு காணாத வாக்குப்பதிவு "91.23 %" : SIR, பணப்பட்டுவாடா! : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பது பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Kannan

புதுச்சேரி தேர்தல்

Puducherry registered 91.23% voter turnout, the highest in the history of the Union Territory : யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. என்டிஏ, இந்தியா கூட்டணி, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி நிலவியது.

91.23% வாக்குப்பதிவு

புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 82.2 சதவீதம் வாக்குப்பதிவு ஆன நிலையில், இம்முறை 91.23% வாக்குப்பதிவாகி உள்ளது.

புதுவை வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

வாக்குப்பதிவு அதிகரிப்பு, காரணம் என்ன?

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று எஸ்ஐஆர் பணி, மற்றொன்று பணம் வெள்ளமாக பாய்ந்தது என்று கூறப்படுகிறது.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

எஸ்ஐஆர் பணிகள்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு முன்பாக 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்களா குறைந்தது. 1 லட்சத்து 3 ஆயிரத்து 437 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் இருந்து நீக்கம்

இறப்பு காரணமாக 20,798 பேரும் (2 சதவீதம்), குடிபெயர்ந்தோர் மற்றும் அவ்விடத்தில் வசிக்காதோர் என 80 ஆயிரத்து 645 பேரும் (8 சதவீதம்), பட்டியலில் இரண்டு முறை இருந்த 2,024 பேரும் நீக்கப்பட்டனர்.

பணப் பட்டுவாடா

எந்த தேர்தலிலும் இல்லாத அளவு இந்த முறை வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் குறைவான பணமே கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்த தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சில ஆயிரங்கள் வரை விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் பணம் போய் சேர்ந்து இருக்கிறது.பொதுமக்கள் அதிக அளவில் வாக்களித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக பேசப்படுகிறது.

அடுத்து யார் ஆட்சி?

எந்த தேர்தலிலும் இல்லாத அளவு வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதால், அது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?.

விஜயின் தவெக என்ன மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

==================