UP govt issued stern directive, attempt to change in government through violence will not granted government jobs source:thamizhalai,ai generated
இந்தியா

வன்முறை, சட்டவிரோத போராட்டங்கள் ”அரசு வேலை கிடையாது” : உ.பி. அரசு அதிரடி, இளைஞர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kannan

Uttar Pradesh government has issued a stern directive stating that those who attempt to bring about a change in government through violence or illegal means will not be granted government jobs.

ஜென் ஸி போராட்டங்கள்

நீட் தேர்வு விவகாரம், எஸ்ஐஆர், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி, ஜென் ஸி இளைஞர்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டங்கள், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாமல் மாநில அரசுகளும் திணறி வருகின்றன.

அதிரடி காட்டும் உத்தர பிரதேச அரசு

இந்தநிலையில், தேவையற்ற போராட்டங்களை ஒடுக்க சாட்டையை சுழற்றி இருக்கிறது உத்தர பிரதேச அரசு.

அதன்படி, அரசுப் பணிகளுக்கான புதிய மற்றும் கடுமையான நற்சான்றிதழ் சரிபார்ப்பு விதிகளை யோகி ஆதித்யநாத் அரசு அமல்படுத்தியுள்ளது.

போராட்டங்கள், வன்முறையில் ஈடுபட தடை

இதன்மூலம் போராட்டங்கள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் மூலம் அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசுப் பணி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச அரசு விளக்கம்

அரசியல் ரீதியான கொள்கைகள் அல்லது சித்தாந்தங்களைக் கொண்டிருப்பதைக் காரணம் காட்டி எந்த ஒரு விண்ணப்பதாரரும் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே ஒருவரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்படாது என்றும் காவல்துறையின் சரிபார்ப்புக்குப் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

அதேநேரம் அரசின் இந்த அதிரடி முடிவுக்குச் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசின் இந்த நடவடிக்கையானது தனிமனித சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும், காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

===================