UPI limit has been extended upto 5 lakhs for some specific transactions Ai Generated
இந்தியா

Unified payment interface : பயனர்களுக்கு குட் நியூஸ் : ₹5 லட்சம் வரை பணம் அனுப்ப புதிய விதி...

UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இனி 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் ...

NARENDRAN K

யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு :

நாட்டில் யுபிஐ வளர்ச்சி அசுரர் வளர்ச்சி அடைந்து அணைத்து மக்களும் பயன்படுத்த கூடிய அளவிற்கு வந்துவிட்டது

குறிப்பிட்ட சில பிரிவுகளில் UPI மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் வரை பணம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்வு :

பொதுவாக UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ₹1 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வரி செலுத்துதல், IPO முதலீடுகள் மற்றும் RBI Retail Direct Scheme போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ₹5 லட்சம் வரை UPI மூலம் பணம் செலுத்த முடியும்.

யாருக்கெல்லாம் இந்த புதிய வரம்பு பொருந்தும்?

மருத்துவமனை கட்டணங்கள்

கல்வி நிறுவன கட்டணங்கள்

வரி (Tax) செலுத்துதல்

IPO விண்ணப்பங்கள்

RBI Retail Direct முதலீடுகள்

சில அங்கீகரிக்கப்பட்ட வணிக பரிவர்த்தனைகள்

இந்த வசதி NPCI அங்கீகரித்த Verified Merchant-களுக்கு மட்டுமே பொருந்தும்

சாதாரண பணப் பரிமாற்றங்களுக்கு என்ன விதி?

நண்பர்கள், உறவினர்கள் அல்லது தனிப்பட்ட கணக்குகளுக்கு UPI மூலம் பணம் அனுப்பும் வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு ₹1 லட்சம் வரம்பு தொடர்கிறது.

அதாவது அனைவருக்கும் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் ₹5 லட்சம் அனுமதி வழங்கப்படவில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் அடுத்த கட்ட வளர்ச்சி :

உயர் மதிப்புள்ள கட்டணங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவச் செலவுகள், கல்லூரி கட்டணங்கள் மற்றும் வரி செலுத்துதல் போன்ற அவசர தேவைகளில் இது பொதுமக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

==================