https://x.com/search?q=from%3A%20upi%20payments&src=typed_query
இந்தியா

பணப் பரிவர்த்தனைக்கு 15 வினாடிகள் - யுபிஐயின் அதிவேக சேவை

யுபிஐ அதிவேக சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால், எந்த பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

வளர்ந்த நாடுகளை போன்று இந்தியாவிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் மிக எளிதான வேலையாக இருக்கிறது.

மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் 25.14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

இந்தநிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை என்பிசிஐ அதிவேகப்படுத்தி உள்ளது.

இதன்மூலம் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிவேகமாக நடக்கும்.

பணப் பரிமாற்றம், நிலை சரிபார்ப்புகள், பணம் உரிய கணக்கிற்கு மாற்றுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் 30 விநாடிகளில் இதுவரை நடந்தது.

இனிமேல் 10 முதல் 15 வினாடிகளில் இந்தச் சேவை முடிக்கப்படும்.

அதே போல் பணம் பெறுபவரின் பெயர் விவரத்தை காண்பிக்க 15 வினாடிகள் ஆனது.

இனிமேல், அதற்கு 10 வினாடிகள் மட்டுமே போதும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ பயன்பாடுகள் மூலம் ஒரு நாளைக்கு 50 முறை தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும்.

======