UPSC NDA Recruitment 2026 announced details for great opportunity those who want to join the tri-services Google
இந்தியா

10,12வது பாஸ் ஆனா போதும் : முப்படையில் சேர அருமையான வாய்ப்பு!

UPSC NDA Recruitment 2026 Announcement : முப்படைகளில் சேர விரும்புவோருக்கு UPSC, அருமையான வாய்ப்பினை வழங்கி, விவரங்களை அறிவித்துள்ளது.

Kannan

முப்படைகளில் பணி வாய்ப்பு

UPSC NDA Recruitment 2026 Announcement : இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) வழங்குகிறது. அதன்படி, 12 ஆம் வகுப்புக்குப் பின் தரைப்படை , கடற்படை , விமானப்படையில் அதிகாரிகளாகவும் , தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் சேர இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஏப்ரல் 12ல் எழுத்துத் தேரவு

விண்ணப்பிக்க டிசம்பர் 30, 2025 கடைசி நாள்(NDA Application Last Date 2026). எழுத்துத் தேர்வு ஏப்ரல் 12, 2026 அன்று நடத்தப்படும்.

விண்ணப்பிக்க தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2007 முதல் ஜூலை 1, 2010 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். அதற்கு முன்னும் பின்னும் பிறந்திருக்க கூடாது.

திருமணம் ஆகாதவர்கள் தகுதியுடையவர்கள்

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 12 ஆம் வகுப்பு முடித்த அல்லது ஏப்ரல் 2026 க்குள் முடிக்கும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எந்த மாநிலத்தவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

நேபாளம் அல்லது பூட்டானை சேர்ந்த குடிமக்களும் , விதிமுறைளின் படி திபெத்திய அகதியாக தங்கியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நல்ல ஆரோக்கியமான உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

394 காலி பணியிடங்கள்

ராணுவம் , கடற்படை , விமானப்படை ஆகியவற்றையும் சேர்த்து 394 பணியிடங்கள் உள்ளன.

ராணுவம் : 208

கடற்படை : 42

விமானப்படை ( பறக்கும் அதிகாரி + தரையில் தொழில் நுட்ப வல்லுனர்) : 120

கடற்படை : 24

மே (அ) ஜூனில் தேர்வு முடிவு

ஏப்ரல் 12, 2026 எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே அல்லது ஜூன் மாதம் முடிவுகள் வெளியிடப்படும். NDA 1 தேர்வுகள் மொத்தமாக 900 மதிப்பெண்கள் உள்ளடக்கியது.

எழுத்து தேர்வு 900 மதிப்பெண்கள்

இதில் இரண்டு முக்கிய தாள்களை கொண்டு ஒரே நாளில் தேர்வுகள் நடைபெறும். முதல் தாள் கணிதப் பிரிவில் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் . இதற்கு கொடுக்கப்படும் கால அவகாசம் 2.30 மணி நேரங்கள். இதற்கு அடுத்த தேர்வு பொது அறிவு பிரிவில் 400 மதிப்பெண்களுக்கும்,

இங்கிலீஷ் பிரிவில் 200 மதிப்பெண்களுக்கும் சேர்த்து ஒரே தாளாக வழங்கப்படும். தேர்வுகள் அனைத்தும் தாளில் பேனா மூலம் நிரப்பும் பாரம்பரிய வடிவத்திலேயே நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் நேர்காணல்

தேர்வில் கட் ஆப் மதிப்பெண்களை (345 - 360) பெறும் நபரே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார். இந்த நேர்காணல் 5 நாட்கள் நடைபெறும். இதில் ஸ்கிரீன் டெஸ்ட் , உளவியல் , கலந்துரையாடல் , திறன் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் இறுதி பட்டியல் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

UPSC வலைத்தளத்திற்கு சென்று NDA-1, 2026 கான விண்ணப்பத்தை நிரப்பவும். இதற்கு உங்கள் புகைப்படம் , கையொப்பம் , அடையாளச் சான்று தேவைப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ₹100 கட்டணம் செலுத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு கட்டணம் இல்லை. படிவத்தை சமர்பித்த பின்னர் உறுதிப்படுத்தலை பதிவிறக்கி கொள்ளவும். மற்ற தகவல்களுக்கு UPSC வலைத்தளத்தை பார்வை இட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

===================