சிவில் சர்வீஸ் தேர்வு
UPSE Results 2026 Rank Holders in Tamil Nadu : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்வு
1,087 காலி பணியிடங்களுக்குக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில் .நேர்முகத்தேர்வானது கடந்த மாதம் நடந்து முடிந்தது .
தமிழகத்தை சேர்ந்தவர்கள் சாதனை
வெளியான முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1087 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் அனுஜ் அக்னிகோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆகான்ஷ் துல் என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார் சாதனை படைத்துள்ளனர்.
இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்நிலையில் இறுதி தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 958 பேரை சிவில் சர்வீஸ் பதவிகளில் பணியமர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்தத் தேர்வில் தேசிய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.