குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :
Donald Trump Birthday Wishes To PM Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாள், அதாவது பவளவிழா பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மோடிக்கு டிரம்ப் வாழ்த்து :
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து(Donald Trump Wishes Modi) கூறினார். அவரை தன் நண்பர் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் :
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்திய நிலையில்(US Tariffs on India), ஜூன் 17ம் தேதிக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொள்வது இதுவே முதல் முறை. 50 சதவீத வரி விதிப்பு, இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதில் சமரசம் செய்து கொள்ள இந்தியா ஒருபோதும் தயாராக இல்லை என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார்.
மேலும் படிக்க : "Modi 75" : 140 கோடி இந்தியரின் அடையாளம் : செல்வாக்கு மிக்க தலைவர்
நன்றி நண்பரே நன்றி :
“தொலைபேசி அழைப்பில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய என் நண்பர், அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி(PM Modi Thanks To Donald Trump for Birthday Wishes). இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வதில் தங்களை போலவே நானும் உறுதியாக உள்ளேன். உக்ரைனில் அமைதியான தீர்வு காண நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து கொண்டுள்ளார்.
=============