அதிபர் டொனால்டு டிரம்ப் கெடுபிடி :
US H1B Visa Fees in Indian Rupees : அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்றதில் இருந்து அதிரடி காட்டி வருகிறார் டோனால்ட் டிரம்ப். குறிப்பாக விசா நடைமுறைகளில் கெடுபிடி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புதல் போன்றவற்றில் பிடிவாத போக்குடன் செயல்படும் அவர், வரி விதிப்பிலும், யாரும் எதிர்பாராத வகையில் போர் தொடுத்து வருகிறார்.
எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணம் உயர்வு :
அந்த வகையில் தற்போது எச்1பி விசா விண்ணப்ப கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி(US H1B Visa Application Fees), அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் டோனால்ட் டிரம்ப். புதிய விதிகளின் படி, எச் - 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டணம் 88 லட்சமாக உயர்வு :
இதுவரை H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதை 88 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தி, வேலைதேடி அமெரிக்க வருவோரையும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களையும் நிலைகுலைய செய்திருக்கிறார் டோனால்ட் டிரம்ப்(Donald Trump on H1B Visa). இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள அவர், இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ள்ளார்.
இந்திய வல்லுனர்களுக்கு பாதிப்பு :
சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்திட கட்டண உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். எச்1 பி விசாவால் அதிக அளவில் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில், கடந்தாண்டு மட்டும் 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றனர்.
மேலும் படிக்க : ”இந்தியாவுக்கும், மோடிக்கும் நான் நெருக்கமானவன்”: டிரம்ப் உருக்கம்
The Trump Gold Card :
Wealthy Foreigners to Pay $1 Million Doller for “Gold Card” for U.S. Residency : இதனிடையே, அமெரிக்காவில் தங்க விரும்பும் தனி நபர்களுக்கு The Trump Gold Card என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றையும் அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்படி, ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசுக்கு செலுத்தி அமெரிக்காவில் குறிப்பிட்ட காலம் வசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை டிரம்ப் அதிகரித்து இருப்பது, இந்திய ஐடி நிறுவனங்களை விட, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தையே அதிகம் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.