இந்தியா - அமெரிக்கா உறவு பாதிப்பு :
Donald Trump on PM Narendra Modi : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீது முதலில் 25% வரி விதித்த அமெரிக்கா பின்னர் அதை 50% ஆக அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது தடைபட்டு இருக்கிறது. மேலும், இருநாட்டு நல்லுறவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி போருக்கு(US Trade War) அந்நாட்டு மக்களும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று உலகத் தலைவர்களில் முதலாவது ஆளாக வாழ்த்து சொன்ன அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump Birthday wishes PM Modi), மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
மோடியை பாராட்டிய டிரம்ப் :
" ... I'm very close to India. I'm very close to the Prime Minister of India.."" President Trump : அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். “ ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பது எனக்கு நன்கு தெரியும். நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்திய பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவன். நான் அவரிடம் பேசினேன்.
மேலும் படிக்க : Modi 75 : டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து : நன்றி தெரிவித்த மோடி
புதின் என்னை ஏமாற்றி விட்டார் :
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். எங்களுக்குள் மிக சிறந்த உறவு உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால் விளாதிமிர் புதின் தோற்றுப் போவார். அவருக்கு வேறு வழி கிடையாது. உக்ரைன் போரை எளிமையாக தீர்த்து விட முயற்சித்தேன். ஆனால், புதின் என்னை ஏமாற்றி விட்டார்” இவ்வாறு டோனால்ட் டிரம்ப்(Donald Trump on Vladimir Putin) உரையாற்றினார்.
=============