வந்தே மாதரத்தின் வரலாறு :
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத இடம்பிடித்த பாடல்களில் முக்கியமானது "வந்தே மாதரம்". 1870களில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட இந்தப் பாடல், பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உத்வேக முழக்கமாக மாறியது.
தாய்நாட்டின் மீதான அன்பு, தேசிய உணர்வு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்தப் பாடல், கடந்த 150 ஆண்டுகளாக இந்தியர்களின் மனங்களில் தனித்துவமான இடத்தைப் பெற்று வருகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களை ஒன்றிணைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல், இன்றும் தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றம் :
2026ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா மூலம், வந்தே மாதரத்திற்கு தேசிய கீதமான "ஜன கண மன"க்கு இணையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது
இந்த சட்டத்தின் கீழ் வந்தே மாதரத்தை அவமதிப்பது, பாடலைத் தடுக்க முயற்சிப்பது அல்லது இடையூறு செய்வது குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நாட்டு மக்கள் வரவேற்பு :
150 ஆண்டுகளைக் கடந்த வந்தே மாதரத்திற்கு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது. தேசிய உணர்வின் அடையாளமாக விளங்கும் இந்தப் பாடலுக்கு இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவமதிப்போருக்கு கடும் தண்டனை :
வந்ததே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் ,எப்படி தேசிய கீதத்தை அவமதித்தல் ஒரு தேச குற்றமாக பார்க்கபடுமோ
அதேபோல இந்த பாடலையும் அணைத்து நட்டு மக்களும் மதிக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றபட்டு அமலுய்க்கு வந்தது
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் கட்டாயம் :
வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நினைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் வந்தே மாதரமும் கட்டாயமாக பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.