Visa concessions to end from Jan 1: Malaysian government puts a hurdle for Indians! source: google
இந்தியா

ஜன. 1 முதல் விசா சலுகை தொடராது : இந்தியர்களுக்கு செக் வைத்த மலேசிய அரசு..!

இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் மலேசியாவில் தங்கலாம் என்ற சலுகையை மலேசிய அரசு வரும் ஜனவரி 1 முதல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

Kavitha prasanna

Visa concessions to end from Jan 1: Malaysian government puts a hurdle for Indians!

ஜனவரி 1 முதல் விசா கட்டாயம்

இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் வரை மலேசியாவில் தங்கலாம் என்ற சலுகையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசு வழங்கி வருகிறது.

இதுநாள் வரையில் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் 2027 ஜனவரி மாதல் 1- ஆம் தேதி முதல் இச்சலுகையை நிறுத்திக் கொள்வதாக மலேசிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுவரையில் இருந்துவந்த நடைமுறை

இதுவரையில் மலேசிய அரசு இந்தியர்களுக்கு அளித்து வந்த சலுகையின் படி, மலேசியாவிற்கு பயணம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்தியர்கள் எண்ம வருகைப் பதிவு அட்டைக்கு பதிவு செய்திருந்தாலே போதுமானது.

அதன்படி அவர்கள் கடவுச் சீட்டை அதாவது விசா இல்லாமலேயே 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கி சுற்றிப்பார்க்க முடியும்.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

ஆனால் வரும் 2027 ஜனவரி மாதம் முதல் இந்தியர்கள் மலேசியாவிற்கு செல்ல வேண்டும் என்றால் முறையாக விசா பெற்று தான் பயணிக்க முடியும். ஏன் இந்த திடீர் மாற்றம் என பலதரப்பிலிருந்து கேள்விகளும் எழுப்பப்படுகிறது.

மலேசிய குடியேற்றத்துறை விளக்கம்

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், மலேசிய அரசின் வழிகட்டுதலின் படி, வெளிநாட்டவர்களின் பயண அனுமதிக்கு வழங்கப்படும் உரிமைகளானது, குறிப்பிட்ட கால இடைவெளியிகளில் மாற்றி அமைக்கப்படுவது இயல்பானது தான் என்று அந்நட்டு குடியேற்றத்துறை விளக்கமளித்துள்ளது.

30 நாள் சலுகையைப் பயன்படுத்தி வரவேண்டாம்

இதற்கு முன்னதாகவே மலேசிய அரசு இந்தியர்களுக்கு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டிருந்தது. அதன்படி மலேசியாவிற்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்கள் 30 நாள் சலுகையை பயன்படுத்தி வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மலேசிய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஏனென்றால் மலேசியாவில் வேலைவாய்ப்பு என்று கூறி சில மோசடியில் ஏடுபடும் முகவர்கள், இந்தியர்கள் பலரை ஏமாற்றி, விசா இல்லாமல் மலேசியாவிற்கு 30 நாள் சலுகையில் அனுப்பி வைத்துள்ளது அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் மலேசிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

===========