ஐந்து மாநிலத் தேர்தல்
ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் 9 முதல் 29 வரை, வேறுவேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கேரள சட்டமன்ற தேர்தல்
140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே கடுமையான மும்முனேப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு - புதிய பிரச்னை?
யாருக்கு வெற்றி வாய்ப்பு, அரியணையை காங்கிரஸ் பிடிக்குமா? மார்க்சிஸ்ட் 3வது முறை ஆட்சி அமைக்குமா? பாஜக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய பிரச்னை ஒன்று தற்போது எழுந்துள்ளது.
வளைகுடாவில் கேரள மக்கள்
காரணம் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பல்லாயிரக் கணக்கான கேரள மக்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
நாடு திரும்புவதில் சிக்கல்
ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கேரளத்தில் பதிவு செய்யப்பட்ட 2.25 லட்சம் வெளிநாட்டு வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் இந்த முறை தாயகம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
வாக்குப்பதிவு சரியும்
கேரளத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வழக்கமாக 60 சதவீத வாக்குப்பதிவு இருக்கும். இந்தமுறை அது 10 சதவீதம் வரை குறையக்கூடும் என்று தெரிகிறது.
விமானக் கட்டணம் அதிகரிப்பு
போர் காரணமாக வளைகுடாவில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானக் கட்டணங்கள் ரூ.8,000ல் இருந்து 60 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.
விழாக்காலங்களில் கூட 21,500 வரை கட்டணம் உயர்ந்து இருக்கிறது. போர் காரணமாக கடுமையாக உயர்ந்து இருக்கும் விமான கட்டணங்களால், வாக்களிக்க கேரள மக்கள் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
வட கேரளம் - வெளிநாட்டு வாக்காளர்கள்
எனவே, வாக்காளர்கள் தேர்தலுக்காக வர வாய்ப்பில்லை. குறிப்பாக, வட கேரளாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வாக்குப்பதிவு குறைந்தால், வெற்றி, தோல்வி மாறும். எனவே, அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
கண்ணூர் to பாலக்காடு
கண்ணூர் முதல் பாலக்காடு வரை பரந்துள்ள சுமார் 50 சட்டமன்றத் தொகுதிகளில் வெளிநாடு வாழ் கேரள (NRK) வாக்காளர்கள் நீண்ட காலமாக தங்கள் பங்கை ஆற்றி வருகின்றனர். இவர்கள் வருவது தடை பட்டால், கட்சிகளின் கணக்குகள் மாறும்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்
கடும் போட்டி நிலவும் மலபார் பகுதியில், ஒவ்வொரு வாக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலின்போது கிட்டத்தட்ட 10,000 வெளிநாட்டவர்கள் வாக்களிக்கத் வந்து சென்றனர். அது இந்தமுறை இல்லாமல் போனால், முடிவுகள் வேறு விதமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
===============