வயநாடு நிலச்சரிவு , இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வரும் நிலையில் வயநாட்டின் மேப்பாடி சுரங்கப்பாதை திட்டம் அருகே உள்ள கள்ளாடியில் நேற்று பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணியில் பேரிடர் குழு
தீயணைப்புப் படையினருடன் இணைந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு குழுவினர் 4 மண்டலங்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் வசித்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு, நிதியுதவி அறிவிப்பு
இந்த கோர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் அறிவித்துள்ளார்.
உரிய விசாரணை - முதல்வர்
சுரங்க பணி செய்த நிறுவனம் விதிகளை பின்பற்றியதா என உரிய விசாரணை நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்
இரவு பகலாக தொடரும் மீட்பு பணி
நிலச்சரிவு ஏற்ப்பட்ட இடம் முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் இயந்திரஙள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிடும் முதல்வர்
பேரிடர் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லவத்ற்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது
மேலும் கேரள தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து 2 வது நாளாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணிகளை முதல்வர் சதீஷன் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்
நிலச்சரிவுக்கு ,சுரங்க பணியே காரணம்
இந்த நிலையில் நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரெட் அலர்ட் விடுப்பு
கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
====================