"We may oppose Prime Minister Modi, but an American cannot dictate to India" owaisi given sharp retort to Elon Musk source:thamizhalai,ai generated
இந்தியா

“பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்” : ஒரு அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது : மஸ்கிற்கு ஒவைசி பதிலடி...!

“பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம், ஆனால் ஒரு அமெரிக்கர் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது என்று எலான் மஸ்கிற்கு ஒவைசி காட்டமான பதிலடியை கொடுத்து இருக்கிறார்.

Kannan

"We may oppose Prime Minister Modi, but an American cannot dictate to India" owaisi given sharp retort to Elon Musk

இந்தியா மீது எலான் மஸ்க் காட்டம்

ஸ்டார்லிங் விவகாரத்தில் இந்தியா மீது எலான் மஸ்க் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கா விட்டாலும், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்கிற்கு கண்டனம்

ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யொன்​றில் கலந்து கொண்ட ஏஐஎம்​ஐஎம் கட்​சித் தலை​வர் அசாதுதீன் ஒவைசி செய்​தி​யாளர்​களிடம் பேசுகையில், “முகேஷ் அம்​பானி​தான் ‘இந்​தி​யா​வின் நிஜ பாஸா?’ என்று கேள்வி எழுப்​பிய உலகப் பெரும் பணக்​காரர் எலான் மஸ்க்​கின் கருத்து கடும் கண்​டனத்​துக்​குரியது.

பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்

நாங்​கள் எப்​போதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதி​ரானவர்​கள்​தான். ஆனால் ஒரு வெளிநாட்டவர் (அமெரிக்​கர்) எவ்​வாறு நம் பிரதமரைப் பற்றி இத்தகைய கருத்​துக்​களை எழுத முடி​யும்?

நாட்டின் வளங்கள் - இந்தியா தான் தீர்மானிக்கும்

நாட்​டின் வளங்​கள் எவ்வாறு பயன்​படுத்​தப்பட வேண்​டும் என்​பதை நமது நாடு​தான் தீர்​மானிக்​கும். இந்த வெள்​ளை​யர் எங்​கோ உட்​கார்ந்​து​ கொண்டு நமக்கு உத்​தர​விடு​வா​ரா?

மோடி அரசு பதில் கொடுக்கணும்

ஒரு வெளி​நாட்​டுத் தொழில​திபர் நமது நாட்​டின் முடி​வெடுக்​கும் அதி​காரத்​தைச் சவாலுக்கு உட்​படுத்​தும்​போது, தேசி​ய​வாதம் பற்றி எப்​போதும் பேசும் பாஜக​வும் மோடி அரசும் ஏன் மவுனமாக உள்ளது?

இந்தியர்களுக்கே முன்னுரிமை

இந்​திய ஊழியர்​கள் மற்​றும் குடிமக்​களின் நலன்​களுக்கே முன்னுரிமை அளிக்​கப்பட வேண்​டும். ஒரு வெளி​நாட்​ட​வரின் நலனுக்​காக இந்​தி​யர்​களின் நலனைப் பலி கொடுக்​கக் கூடாது.

சொந்த நாட்​டில் அரசைக் கண்​டிப்​ப​தற்​கும், ஒரு வெளி​நாட்டு தொழில​திபர் நமது நாட்​டுக்கு நிபந்​தனை​களை விதிக்க அனுமதிப்​ப​தற்​கும் நிறைய வித்​தி​யாசம் உள்​ளது”, என்று ஒவைசி தெரிவித்தார்.

==============