West Bengal Assembly Elections 2026 : Election Commission takes action by transferring 3 officials including DGP! google
இந்தியா

மேற்கு வங்கம் :டிஜிபி உள்பட 3 முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி!

West Bengal Assembly Elections 2026 : மேற்கு வங்கத்தில் டிஜிபி மற்றும் மூன்று மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Rohini

இடமாற்றம்- புதிய அதிகாரிகள் நியமனம்

West Bengal Assembly Elections 2026 : மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் திடீரென மேற்கு வங்கத்தில் டிஜிபி மற்றும் மூன்று மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

வருகிற 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .மேலும் இறுதி வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெரும் என்று தெரிவித்துள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்

நந்தினி சக்ரவர்த்திக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஷ்யந்த் நரியாலா தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும், அதேநேரத்தில் பியூஷ் பாண்டேவுக்குப் பதிலாக உயர் போலீஸ் அதிகாரி சித்த் நாத் குப்தா டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளிலிருந்தும் நந்தினி சக்ரவர்த்தி விலக்கி வைக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது

சுப்ரதிம் சர்க்காருக்குப் பதிலாக, மூத்த அதிகாரி அஜய் குமார் நந்த் கொல்கத்தா காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அஜய் முகுந்த் ரனாடே கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (சட்டம் மற்றும் ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் vs திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள வந்த நிலையில் இந்த இடமாற்ற விவகாரமும் அங்கு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.