West Bengal assembly elections, the Trinamool Congress and the BJP used fish politics to garner votes google
இந்தியா

மேற்கு வங்க​ தேர்தலில் “ மீன் அரசியல்” : மம்தாவின் பிரசாரத்தை முறியடித்த பாஜக...

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மீன் அரசியலை கையில் எடுத்து திரிணாமூல் காங்கிரசும், பாஜகவும் வாக்கு சேகரித்தன.

Kannan

மேற்கு வங்கமும், மீன் உணவும்

இந்தியாவில் மீன் நுகர்வு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். அதிக நதிகளை இந்த மாநிலம் கொண்டு இருப்பதால், பொதுமக்களில் பெரும்பாலானோர் மீனை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மீன் அசைவ உணவு பட்டியலில் இருந்தாலும், சைவ உணவாளர்களும் அதை விரும்பி உண்பதை காணலாம்.

புகார் கிளப்பிய மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உள்​ளிட்ட பெங்​காலி வகை உணவு முறையை தடை செய்து விடு​வார்​கள் என முதல்​வர் மம்தா பானர்ஜி முதல்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் புகார் எழுப்​பி​னார்.

மீன் அரசியல்

இதை மறுக்க வேண்​டிய கட்​டா​யம் பாஜக​வுக்கு ஏற்​பட்​டது. இதனால் இரண்​டாவது மற்​றும் இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரத்​தி​லும் மீன் அரசி​யல் முக்​கிய இடம் பிடித்​தது.

மீனை கையிலெடுத்த பாஜக

பாஜக எம்பி அனு​ராக் தாக்​கூர் மீன் சாப்​பிடும் காட்​சிப்​ப​திவு வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. பாஜக தலை​வர்​களில் பலர் தங்​கள் கைகளில் மீன்​களை ஏந்​தி​யபடியே பிரச்​சா​ரம் செய்​தனர்.

போஜ்புரி மொழி திரைப்பட நாயகரும் உ.பி.​யின் கோரக்​பூர் எம்​.பி.​யு​மான ரவி கிஷன் தனது பிரச்​சா​ரக் காட்​சிப்​ப​தி​வில், “தேர்​தல் முடிவு வெளி​யாகும் மே 4ம் தேதிக்​குப் பிறகு, நீங்​கள் வழக்​கத்தை விட நான்கு மடங்கு மீன் சாப்​பிடுங்​கள்.

மீனுக்கு பஞ்சம் இருக்காது

அனைத்து வகை மீன்​களை​யும் நாங்​கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்​போம். என்​டிஏ ஆட்சி செய்​யும் மாநிலங்​களில் இருந்து மீன்​களைக் கொண்​டு​வந்து மேற்கு வங்​கக் கிணறுகள் மற்​றும் குளங்​களில் விடு​வோம்.

எனவே அதிக மீன் சாப்​பிடு​வ​தில் எந்​தப் பிரச்​சினை​யும் இருக்​காது" என்​றார்.

மம்தாவை திணறடிக்கும் பாஜக

தனது வாக்கு வங்கியை தக்க வைக்க மம்தா பானர்ஜி கையிலெடுத்த மீன் அரசியல், அவருக்கு எதிராக திரும்பி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மீன் உணவு புள்ளி விவரம்

மத்​திய அரசின் தேசிய குடும்ப சுகா​தார ஆய்​வின் தரவு​களின்​படி, நாடு முழு​வதும் 45.7% ஆண்​களும், 35.7% பெண்​களும் மீன் உண்​கின்​றனர். தேசிய அளவில் ஆண்​களே அதிக அளவில் மீன் உண்​பவர்​களாக இருந்​தா​லும், மேற்கு வங்க நிலைமை இதற்கு மாறாக உள்​ளது. இங்கு 87.8% பெண்​களும், 87.4% ஆண்​களும் மீன் உண்​கின்​றனர்.

====