West Bengal, second phase of elections, voting machine malfunction, tension in many constituencies google
இந்தியா

மேற்குவங்கம் இரண்டாம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு இயந்திர கோளாறு : பல தொகுதிகளில் பதற்றம்!

மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இயந்திரங்கள் கோளாறால் பல தொகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது

Rohini

மேற்கு வங்கம் 2ம் கட்ட தேர்தல்

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது தற்போது 142 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது .

முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குப்பதிவு

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது .

முதற்கட்ட வாக்குப்பதிவைப் போன்றே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுநடந்து வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, 18.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு

இந்த நிலையில் இது வரையில் தொகுதி வாரியாக பூர்பா பர்தமான் சட்டப்பேரவைத் தொகுதியில் 20.86 சதவிகித வாக்குகளும், ஹூக்ளியில் 20.16 சதவிகிதமும், நாடியாவில் 18.50 சதவிகிதமும்,

வடக்கு 24 பர்கானாஸில் 17.81 சதவிகிதமும், கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு தொகுதிகளில் முறையே 17.28 சதவிகிதமும் 16.81 சதவிகிதமும் ஹவுராவில் 17.76 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழலில் வாக்குசாவடிகள்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதியான ஹூக்ளி மாவட்டம், கானாகுல் தாலுகாவில் உள்ள ராம்சந்திராபூர் பகுதியில், வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வன்முறையில்,

திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

பாதுகாப்பில் துணை ராணுவ படையினர்

இதனைத் தொடர்ந்து , பதற்றமான வாக்கு சாவடி மையங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக சாப்ரா, சாந்திபூர், பாங்கர், நாடியா, எண்டாலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளதாகவும்,

பாலியில் மின்னணு வாக்கு எந்திரம் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்ட இருவரை துணை ராணுவப்படையினர் கை மற்றும் கால்களைப் பிடித்து தூக்கிச் சென்று கைது செய்தனர்.

2,321 மத்திய பாதுகாப்பு படை

வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

==============