What is Vande Mataram Why were 4 paragraphs removed here is Vande Mataram New Guidelines in Tamil Source : Google
இந்தியா

வந்தே மாதரம் 4 பத்திகள் நீக்கம் ஏன் : முழு பின்னணியை பார்க்கலாம்

வங்க மொழியில், நாட்டிற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் தேசிய பாடலாக எப்போதோ அரசு அறிவித்துவிட்டது . இதையடுத்து, இந்த பாடல் தற்போதைய அரசால் அனைத்து அரசு விழாக்களிலும் பாட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Rohini

யாரால எழுதப்பட்டது இந்த வந்தே மாதரம்

Vande Mataram New Guidelines in Tamil : பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டதுதான் வந்தே மாதரம் .தற்போது இப்பாடலை மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து அரசு விழாக்களிலும் இசைக்க வேண்டும் என்று கட்டாயம் ஆக்கியிருக்கிறது.

வந்தே மாதரம் பொருள்

வந்தே மாதரம் என்பதற்கான பொருளாக ’வந்தே’ என்றால் வணங்குகிறேன், ‘மாதரம்’ என்றால் தாயை வணங்குகிறேன் என்று பொருள்படும்.

தமிழில் ‘தாயே உனக்கு வணகம்’ அல்லது ‘தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்’ என்று அர்த்தப்படுகிறது.

வந்தே மாதரம் சுதந்திர முழக்க பாடல்

பங்கிம் சந்திர சட்டர்ஜி. எழுதிய பிரபலமான பாடல் தான் , ‘வந்தே மாதரம்’. இந்த பாடல், 1882ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்தமாத்’ எனும் நாவலில் எழுதப்பட்ட கவிதை ஆகும்.

இந்தியா, வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த நேரத்தில், இந்த கவிதையைதான், சுதந்திர முழக்க பாடலாக போராட்டக்காரர்கள் முழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது .

போராட்டக்காரர்களின் முழக்க பாடல்

1905ஆம் ஆண்டில், வங்காளத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது தான் போராட்டக்காரர்கள் இந்த பாடலைதான் தங்களின் போராட்ட முழக்கமாக வைத்திருந்தனர்.

ரவீந்தர நாத் தாகூரும் தான் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் இப்பாடலை பற்றி பேசியிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

1915ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய போது, ‘வந்தே மாதரம்’ என்ற இவ்வரிகளுடன் அக்கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தி பாடலா வந்தே மாதரம்

ஆசிரியர் இதழை அச்சிடும் போது, காலியாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்கு பயன்படுத்திய ஒன்றுதான் வந்தே மாதரம் பாடல்.

ஆனால் பிற்காலத்தில் அது சுதந்திர முழக்க பாடலாக மாறும் என்பது அவருக்கே தெரியாது.

அன்றைய காலத்தில் வந்தே மாதரம் பக்தி பாடல் என்ற விவாதமும் பேச்சும் கூட இருந்து வந்தது, காரணம் அவர் பெண் கடவுள்களை வர்ணித்து இப்பாடலை எழுதினார் என்பதால்.

4 பத்திகள் நீக்கம் பின்னணி காரணம்

1937ஆம் ஆண்டில், காங்கிரஸ் ஆட்்சியின் போது , வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. 1950ல் அதிகாரப்பூர்வம் ஆனது

பிற நான்கு பத்திகள் நீக்கப்பட்டது. இதில், இந்து கடவுள்களான துர்கை, லக்‌ஷ்மி, சரஸ்வதி உள்ளிட்ட பெண் தெய்வங்களுடன் நாட்டை ஒப்பிட்டு சட்டர்ஜி இப்பாடலை எழுதியிருந்த காரணத்தினால் பாடல் நீக்கப்பட்டதாக அறிவித்திருந்தது .

ஆறு பத்திகள் கொண்டே பாடலை பாட வேண்டும்

வந்தே மாதரம் பாடலின் 150வது வருடம் கடந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

அச்சமயத்தில் பாஜக அரசு முக்கியமான வரிகளை பாடலில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிட்டது என்ற கருத்தை முன்வைத்து இருந்தது .

இன்றை நாளில், நீக்கப்பட்ட அந்த பத்திகளுடன் சேர்த்து, மொத்தம் ஆறு பத்திகள் தேசிய கீதத்திற்கு முன்பு பாடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த பாடல், மொத்தம் 3 நிமிடம் 10 வினாடிகளுக்கு அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் இசைக்கப்படும்.

அப்படி இசைக்கப்படும் இந்த நேரத்தில், அனைவரும், எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

=====