When will total lunar eclipse 2026 occur in India visible? Information about its time and date in Tamil Source : Google
இந்தியா

Lunar Eclipse 2026 : ”முழு சந்திர கிரகணம்” இந்தியாவில் எப்போது? : நேரம், நாள் குறித்து பார்க்கலாம்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் நடக்கக்கூடிய ஒன்றாகவும் .அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கிறது.

Rohini

பொதுவாக சந்திர கிரகணம் என்பது என்ன

Lunar Eclipse 2026 Visible Date and Time in India : பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது, அதன் நிழல் நிலவின் ஒளியை மறைக்கும் போது இந்த சந்திர கிரகண நிகழ்வானது தோன்றுகிறது .

இதனால் பூமிக்கு சந்திரனின் ஒளி கிடைக்காது அல்லது மங்கலாக இருக்கும். எப்போதுமே சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம்

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம்(Lunar Eclipse 2026 Date and Time in Tamil) மார்ச் 3, 2026 மதியம் 03:20 மணி முதல் மாலை 06:47 மணி வரை நீடிக்கும்.

இதில் உச்சபட்ச கிரகண நேரமாக, மாலை 06:26 மணிக்கு முதல் மாலை 06:40 மணி வரை கிரகணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த நிலவு (Blood Moon) :

முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலுக்குள் சென்று மறைவதால், அப்போது ஆழமான சிவப்பு நிறமாக மாறும். இதுவே “ரத்த நிலவு” (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலுமா

இந்தியாவில் இருபவர்கள் இந்த , கிரகணத்தின் முழுமையான நிகழ்வை நம்மால் பார்க்க முடியாது. இருப்பினும், கிரகணம் முடியும் தறுவாயில் உள்ள கடைசி 20 நிமிடங்கள் இந்தியாவில் சில பகுதிகளில் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது .

சந்திர கிரகணம் 2026 - ஜோதிட பார்வையில்

இந்த முழு சந்திர கிரகணம் சிம்ம ராசியில், பூர நட்சத்திரத்தில் (Purva Phalguni / Pooram) நிகழ்கிறது என்பதால் ,இது சிம்ம ராசிப் பெண்களுக்கு மன அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்படுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் படிக்க : நெருப்பு வளைய சூரிய கிரகணம் : பிப்.17ல், இந்தியாவில் தெரியுமா!

ரத்த நிலவை நேரடியாக காணலாம்

இந்த ரத்த நிலவை நேரடியாக காண சிறப்பு கண்ணாடி அல்லது கருவிகள் எதுவும் தேவையில்லை மாறாக நேரடியாக கிரகணத்தை அபப்டியே பார்க்கலாம்.

பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இருந்தால், இன்னும் தெளிவாகக் காண முடியும். அல்லது

அதிக விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து பார்த்தால் இந்த ரத்த நிலவு (Blood Moon) இன்னும் நன்றாகத் தெரியும்.

==================