who are unable to produce their voter ID card can vote by showing 12 alternative documents google
இந்தியா

”வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்” : ஓட்டுப்போட 12 மாற்று ஆவணங்கள்! : பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்...

வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள மாற்று புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம்.

Kannan

வாக்களிக்க மாற்று ஆவணங்கள்

Those who are unable to produce their voter ID card can vote by showing 12 alternative documents with a photograph listed by the Election Commission : தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலின் போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மாற்று ஆவணங்களை காண்பிக்கலாம்.

அவை என்ன என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

1. ஆதார் அட்டை

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை

3 புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்

4 தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை

5 ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை

6. ஓட்டுநர் உரிமம்

7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)

8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை

9. இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11. நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை

போன்றவற்றை மாற்று ஆவணமாக பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

===============