Why are the 'Great Nicobar' projects so important? - Central Government explanation  google
இந்தியா

’கிரேட் நிகோபார்’ திட்டங்கள் மிகவும் அவசியம் ஏன்? : மத்திய அரசு விளக்கம்!

கிரேட் நிகோபர் திட்​டத்​தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்​கிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது

Rohini

கிரேட் நிகோபார் திட்டங்கள் மிக​வும் அவசி​யம்: மத்திய அரசு விளக்கம்

ந்​திய பெருங்​கடல் – பசிபிக் கடல் பிராந்​தி​யத்​தில் இந்​தியா வலு​வடைய கிரேட் நிகோபார் உள்​கட்​டமைப்பு திட்டங்கள் மிக​வும் அவசி​யம் என்று மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது,

கிரேட் நிகோபர் திட்​டத்​தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்​கிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

ஆசி​யா, ஐரோப்பா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இடையே பயணிக்​கும் சரக்கு கப்​பல்​களை சிங்​கப்​பூர், கொழும்பு துறைமுகங்​கள் கையாள்​கின்​றன. இதற்கு மாற்​றாக இந்​தி​யா​வின் நிகோ​பார் தீவின் கலாத்​தியா வளை​கு​டா​வில் மிகப்​பெரிய துறைமுகம் அமைக்​கப்பட இந்த திட்டம் மூலம் முடிவுஎடுக்கப்பட்டுள்ளது .

இதன்​மூலம் சர்​வ​தேச கடல் வணிக போக்​கு​வரத்​தில் இந்​தியா மிக முக்​கிய இடத்​தைப் பிடிக்கும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்

ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோ​பார் தீவில் பிரம்​மாண்ட கிரீன்​பீல்ட் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்டப்பட இருப்பதாகவும் , இதுவும் ராணுவ பயன்​பாட்​டுக்​கும் ஏற்​ற​தாக வடிவ​மைக்​கப்​படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

இதன்​மூலம் சுற்றுலா, சரக்கு போக்​கு​வரத்து மேம்​படும். விமானப் படை​யின் வலு​வான தளமாக​வும் செயல்​படும்.நிகோபர் தீவில் குடி​யிருப்பு பகு​தி​கள், வணிக வளாகங்​கள், சுற்​றுலா வசதி​கள், பாது​காப்பு உள்​கட்​டமைப்​பு​கள்

ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பிரம்​மாண்ட ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. இந்த நகரத்​தில் 5 லட்​சம் பேர் வரை வசிக்க முடி​யும என்றும் தெரிவித்துள்ளது

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில் நிகோபார் தீவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட அவர், கிரேட் நிகோ​பார் திட்​டம், இயற்கை மற்​றும் பழங்​குடி மக்​களுக்கு எதி​ரான மிகப்​பெரிய மோசடிஎன்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1.82 சதவீத காடு​கள் மட்​டுமே அழிக்​கப்​படும் மத்திய அரசு தரப்பு விளக்கம்

இந்​திய பெருங்​கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்​தியா வலு​வடைய கிரேட் நிகோ​பார் உள்​கட்​டமைப்பு திட்​டங்​கள் மிக​வும் அவசி​யம் என்று தெரிவித்துள்ள ,மத்திய அரசு

இந்த திட்​டத்​தால் அந்​த​மான்- நிகோ​பார் தீவு​களில் 1.82 சதவீத காடு​கள் மட்​டுமே அழிக்​கப்​படும். இதனால் சுற்​றுச்​சூழலுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்​பு​கள் ஏற்​ப​டாது. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

சுற்றலாத்துறை மேம்படும்

கிரேட் நிகோ​பார் துறை​முக திட்​டத்​தால் இந்​தி​யா​வின் கடல் வழி வர்த்தகம் அதி​கரிக்​கும். வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கும். சுற்றுலா துறை மேம்​படும். கணிச​மான முதலீடு​கள் குவி​யும்.

===========