அவரச கூட்டத்திற்கு என்ன அவசரம்
ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம். தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா.
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான மத்திய அரசின் கூட்டத்தொடர் குறித்து காட்டமான பதிவை பகிர்ந்துள்ளார்
இடஒதுக்கீட்டிற்கான சிறப்பு கூட்டம்
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்க இருக்கிறது
முதல்வரின் எதிர்ப்பு பதிவு
இது குறித்து அவர் தந்து சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுளதாவது ,
தொகுதி மறுவரையறை ஆபத்து: இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? தெற்கில் வீசும் மென்காற்றைப் புயலாக மாற்றிவிடாதீர்கள்!
தெற்கு மக்கள் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் பதிலளிக்க வேண்டும்!
மத்திய பாஜக அரசு, தொகுதி மறுவரையறை செயல்முறையை எவ்வாறு நடத்த உத்தேசித்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல், ஏன் முழு செயல்முறையையும் இரகசியமாக மூடிவைத்துள்ளது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2001-ல் தொகுதி மறுவரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததைப் போலவே, தானும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று தெற்கு மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?
கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை என்ன?
ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை என்ன?
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகே கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தைப் புறக்கணிப்பதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தாமலேயே, மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பது சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு இல்லையென்றால் வேறு என்னவாக இருக்க முடியும்?
எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எழுப்பிய கேள்விகளுக்கு இது பதிலளிக்கவில்லை. குறைந்தபட்சம் மக்களின் கேள்விகளுக்காவது இது பதிலளிக்குமா?தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் புறக்கணித்து, வடக்கின் மீது அதிகாரத்தைப் பொழியும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை திமுக சும்மா வேடிக்கை பார்க்காது.
இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் சம்மதம் இல்லாமல், எங்களிடம் பேசாமல் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் நாங்கள் ஏற்க மாட்டோம்—அதற்கு எவ்வளவு செலவானாலும்
சரி நாங்கள்#நியாயமானதொகைவரையறையைக் கோருகிறோம் !என்றும் குறிப்பிட்டுள்ளார்
மகளிருக்கான இடஒதுக்கீடு
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும்.
இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது