woman who mispronounces the names of football players while engaging in online sales has become a nationwide trend. google
இந்தியா

’லக்‌ஷ்மி அம்மாள் டீசர்ட்’ : இந்தியாவிலும் ட்ரெண்டான FIFA : ஆன்லைன் பெண் விற்பனையாளருக்கு குவியும் பாராட்டு...!

கால்பந்து வீரர்களின் பெயரை, தவறாக உச்சரித்து, ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு வரும் பெண்மணி நாடு முழுவதும் ட்ரெண்டா இருக்கிறார்.

Kannan

உலகக்கோப்பை கால்பந்து

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மாபெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை 11ம் தேதியன்று கோலாகலமாக தொடங்கியது.

கால்பந்து ஜாம்பவான்கள்

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இத்தொடர் ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து ஜூரம்

FIFA உலகக்கோப்பை காய்ச்சல உலகம் முழுக்க ரசிகர்கள் உற்சாகம கொண்டாடி வருகிறார்கள்.

இணையத்தை கலக்கும் செல்வி அம்மாள்

இந்தநிலையில், வயதான பெண்ணான செல்வி என்பவர், கால்பந்து ஜெர்ஸி விளம்பர வீடியோ மூலம் இணையத்தை கலக்கி வருகிறார்.

நகைச்சுவையாக மாற்றி பேசும் சுவாரஸ்யம்

லாமின் யமால் பெயரை ‘லக்‌ஷ்மி அம்மாள்’, மெஸ்ஸியை ‘லெஸ்ஸி’, ரொனால்டோவை ‘நரோடா’ என நகைச்சுவையாக மாற்றி கூறும் அவரது பேச்சு வைரலாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பிரபலம்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட செல்வி அம்மாளை சிலாகித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். செல்வி அம்மாள் இவ்வாறு மாற்று பேசுவது வியாபார உத்தியாக பார்க்கப்பட்டாலும், இதன்மூலம் அவர் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

ஃபிஃபா பிரபலப்படுத்திய செல்வி அக்கா

அவரது வீடியோவை பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவரின் பேச்சு தன்னை கவர்ந்துவிட்டதாகவும், எல்லோரும் ஃபிஃபா உலகக் கோப்பையை இந்தியாவிற்கு கொண்டுவர என்னென்னமோ செய்கிறார்கள்,

பாராட்டிய அஸ்வின்

ஆனால் செல்வி அக்கா ஃபிஃபா உலகக்கோப்பையை தனியாளாக இந்தியாவிற்கு கொண்டு வந்துவிட்டார் என பாராட்டியுள்ளார். அஸ்வின் பாராட்டிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

====================

இந்தசூழலில் தான் கால்பந்து உலகக்கோப்பையை முன்னிட்டு, கால்பந்து வீரர்களின் ஜெர்ஸியை விற்பனைசெய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்த வயதான பெண் ஒருவர், கால்பந்து வீரர்களின் பெயரை மாற்றி கூறியது இணையத்தில் வைரலானது. லாமின் யமால் பெயரை லக்‌ஷ்மி அம்மாள் எனவும், மெஸ்ஸி பெயரை லெஸ்ஸி எனவும், ரொனால்டோ பெயரை நரோடா எனவும் கூறியது ரசிகர்களை கவர்ந்தது.

=================