சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசியின் தரவரிசை
Women's cricket rankings: Mandhana at number one ; மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தரவரிசையை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டது. அதன்படி மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் இந்திய மகளிர் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இவர் , 790 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்
அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்கள்
ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலின் அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களின் புள்ளி விவரங்களையும் ஐசிசி வெளியிட்டுள்ளது அதன்படி
2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 782 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியும் 749 புள்ளிகளுடனும் ,
4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனரும்724 புள்ளிகள், 5-வது இடத்தில் இங்கிலாந்தின் நாட் ஷிவர்-பிரன்ட்டும் 714 புள்ளிகள் தரவரிசையுடன் இருக்கின்றனர்
தொடர்ந்து 674 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் ஆகியோர் இருக்கின்றனர்
இந்திய வீராங்கனைகள்
இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், 652 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். நடந்து முடிந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக் 12-வது இடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
========