World Bank commended India, 496 million people in the country emerged from poverty over last 12 years source:thamizhalai,ai generated
இந்தியா

”50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு” : 12 ஆண்டுகளில் சாதித்த இந்தியா : உலக வங்கி பாராட்டு..!

இந்தியாவில் கடந்த 12 ஆண்​டுகளில் சுமார் 49.6 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்​டு இருப்பதாக உலக வங்கி பாராட்​டு தெரி​வித்​துள்​ளது.

Kannan

உலக வங்கி அறிக்கை

உலக வங்கி அக். 2026-க்கான இந்​திய வறுமை மற்​றும் சமத்​துவ அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டுள்​ளது. அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: தீவிர வறுமை மற்​றும் பல்​வேறு அடிப்​படை வசதி​கள் தொடர்​பான வறுமையைக் குறைப்​ப​தில் இந்​தியா குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் கண்​டுள்​ளது.

50 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு

குறிப்​பாக, இந்​தி​யாவில் 2011 முதல் 2023-ம் ஆண்டு வரையி​லான கால​கட்​டத்​தில் சுமார் 49.6 கோடி பேர் வறுமையி​லிருந்து மீண்டுள்ளனர். இதன்​மூலம், உல​கிலேயே மிக வேக​மாக வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்​றாக இந்​தியா திகழ்கிறது.

வருமானத்தில் ஏற்றத்தாழ்வு

இருப்​பினும், நாட்​டில் வரு​மான ஏற்​றத்​தாழ்வு தொடர்ந்து அதி​க​மாக உள்​ளது. இந்​தி​யாவில் அதிக வரு​மானம் ஈட்​டும் முதல் 10 சதவீத தொழிலா​ளர்​களின் சராசரி வரு​மானம், கடைசி 10 சதவீதத்​தில் உள்ள தொழிலா​ளர்​களின் வரு​மானத்​தைவிட கிட்​டத்​தட்ட 13 மடங்கு அதி​க​மாக உள்​ளது.

பணவீக்​கத்​தைக் கணக்​கில் கொண்ட உண்​மையான ஊதி​யத்​தில் தேக்​கநிலை, வேலை​வாய்ப்​பு​களின் தரம் குறைவாக இருப்​பது, பொருளாதார வாய்ப்​பு​கள் அனைவருக்​கும் சமமாகக் கிடைக்​காதது போன்ற சவால்​கள் இன்னமும் இருக்கின்றன.

2021ம் ஆண்​டின் வாங்​கும் திறன் அதாவது நாளைக்கு ரூ.399-க்​கும் குறைவான வரு​மானத்​தில் வாழும் மக்​களின் விகிதம், இந்​தி​யாவில் 2011-ல் 57.7 சதவீத​மாக இருந்​தது.

தீவிர வறுமை ஒழிப்பு

இது 2023ல் 16.1 சதவீத​மாகக் கடுமையாகக் குறைந்துள்​ளது. அதேபோல், தீவிர வறுமையும் கணிச​மாகக் குறைந்​துள்​ளது. ஒரு நாளைக்கு ரூ.285-க்​கும் குறைவான வரு​மானத்​தில் வாழும் மக்களின் விகிதம், இதே கால​கட்​டத்​தில் 27.1 சதவீதத்​தி​லிருந்து 2.6 சதவீத​மாகச் சரிந்​துள்​ளது.

கிராமப்புறங்களில் அதிக அளவில் வறுமை

நாடு முழு​வதும் வறுமை குறைந்​திருந்​தா​லும், அதன் தாக்​கம் அனைத்து பகுதி​களி​லும் ஒரே மாதி​ரியாக இல்லை. ஒரு நாளைக்கு ரூ.399 வரு​மானம் என்ற அளவு​கோலின்​படி, 2023-ல் கிராமப்​புறங்​களில் வறுமை விகிதம் 19.3 சதவீத​மாக இருந்​தது. நகர்ப்​புறங்​களில் இது 8.6 சதவீத​மாக மட்​டுமே இருந்​தது.

13 கோடி பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு

இந்​தி​யாவில் 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையி​லான கால​கட்​டத்​தில் சுமார் 13.4 கோடி பேர் கூடுதலாக வேலை​வாய்ப்​பைப் பெற்றுள்​ளனர். இது வேலை செய்​யும் வயதுடைய மக்​கள்​தொகையின் அதி​கரிப்​பைவிட கிட்​டத்​தட்ட இரு மடங்கு அதிகமாகும்.

இருப்​பினும், வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரித்த அளவுக்கு ஊதி​யம் உயர​வில்லை. பணவீக்​கத்​தைக் கணக்​கில் கொண்ட உண்​மையான வரு​மானத்​தில் பெரிய மாற்​றம் ஏற்படவில்லை. இவ்​வாறு ஐ.நா. அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

================