இந்தியாவில் வேலையின்மை 2 சதவீதம் தான்
World Economic Forum on India Unemployment Rate 2025 : இந்தியாவின் வேலையின்மை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து விட்டதாகவும், பெரிய சவால்களை இளைஞர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள் என்றும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை, உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை(World Economic Forum Report) அம்பலப்படுத்தி, முகத்திரையை கிழித்து இருக்கிறது. அதனை விரிவாக பார்ப்போம்.
2025ம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் G20 நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது. அதாவது வெறும் 2 சதவிகிதம்(India Unemployment Rate Percentage in Tamil) மட்டும்தான் என்றது நிரூபணமாகி இருக்கிறது.
தேசிய தொழில் சேவை (NCS) திட்டம்
வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் புதுமை மூலம் இளைஞர்களை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு பன்முக அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது. இந்த சாதனையின் ஒரு பகுதிதான் பிரதமர் மோடி 2015 ம் ஆண்டு தொடங்கிய போர்டல். அதாவது தேசிய தொழில் சேவை (NCS) திட்டம். இது இந்தியாவில் வேலை தேடுபவர்கள், முதலாளிகள் மற்றும் தொழில் ஆலோசனை சேவைகளுக்கான ஆன்லைன் தளமாகும்.
NCS போர்டில் - இளைஞர்களுக்கு பயன்
NCS போர்டலில், தற்போது, 52 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள், 5.79 கோடி வேலை தேடுபவர்கள், 7.22 கோடிக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான தகவல்கள் இருக்கின்றன. 44 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன.
இளைஞர்கள் வேலைவாய்ப்பில் கூடுதல் கவனம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் 5 முதன்மைத் திட்டங்களில் ₹ 2 லட்சம் கோடியை முதலீடு செய்து இருக்கிறது. 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.
பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா
இதில் முதலாவது திட்டம் பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, இதன் இலக்கு என்னவென்றால், 3.5 கோடி வேலைகளை உருவாக்குதல். இதற்கான செலவு 99,446 கோடியாகும். 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை இலக்காக கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிதாக வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை, அவர்களுக்கு 2 தவணைகளில் ரூ.15,000 ஊக்கத்தொகை. வேலைகளை முறைப்படுத்தி,: சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
பணியின் போது ஊக்கத்தொகை, அரிய வாய்ப்புகள்
முதல் முறையாக பணியில் அமர்த்தப்படுவோருக்கு, திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, நிலையான, நீண்டகால வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர உதவுகிறது.
உற்பத்தி துறையில் 30 லட்சம் வேலைகள்
குறிப்பாக உற்பத்தித் துறையில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. வேலை கிடைத்த முதல் நான்கு ஆண்டுகளில் EPFO பங்களிப்புகளின் அடிப்படையில் ஊழியர் மற்றும் முதலாளி இருவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அனைத்து துறைகளிலும் 50 லட்சம் கூடுதல் ஊழியர்கள்
பணியமர்த்தப்பட்ட 12 மாதங்களுக்குள் பணியாளர் வெளியேறினால் முதலாளியால் மானியம் திரும்பப் பெறப்படும். அனைத்துத் துறைகளிலும் 50 லட்சம் கூடுதல் ஊழியர்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கி அரசு பயணிக்கிறது. மாதம் 1 லட்சம் வரை சம்பளம் உள்ள துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அரசின் முனைப்பாக உள்ளது. முதலாளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை கிடைக்கும்.
20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
மாநிலங்கள் மற்றும் தொழில் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : 51,000 பணிநியமன ஆணைகள் : பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்
தொழில்திறன் மிக்க 1 கோடி இளைஞர்கள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆயிரம் ITI-களை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி பெற்று வரும் துறைகளுக்கு ஏற்ப, புதிய பாடங்கள், தொழில் தேவைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களை தொழில் திறன் மிக்கவர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் ஒருமுறை உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள 500 சிறந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். அமேசான், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது, இவை இணைந்து ஐந்து லட்சம் காலியிடங்களை உருவாக்கியுள்ளன. அவற்றின் மூலமும் இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.