டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை :
India's UPI in World Fast Payments Rank : 2016ல் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இப்போது அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. மத்திய பாஜக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் இந்தத் திட்டம், சாலையோர கடைகள் வரை விரிவாகி பயன்பாட்டில் உள்ளது. குக்கிராமங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாட்டிற்கு வந்து விட்டது. பெரும்பாலான பரிவர்த்தனைகள் யுபிஐ(UPI Transections) கணக்கு மூலம் நடைபெறுகின்றன.
சர்வதேச நிதியம் பாராட்டு :
”அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(NPCI) 2016ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம்(UPI Origin Year) ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதி அளிக்கிறது. இதன் மூலம் குறைந்த செலவில் எளிதாக, உடனடியாக, பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.
மாதம் ரூ.1,800 கோடி பரிமாற்றம் :
யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை கையில் பணம் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையில் இருந்து மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாற்றி இருக்கிறது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் மிக முக்கியமான அங்கமாக யுபிஐ(UPI) மாறியுள்ளது.
யுபிஐ கணக்குகள் ஆதிக்கம் :
இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது(UPI Transections). இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த யுபிஐ முறைக்கு உலகளாவிய அங்கீகாரம்(UPI Global Rank) கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமாக நடைபெறும் டிஜிட்டல் பணம் செலுத்துதலில் யுபிஐ வசம் 50 சதவீதம் உள்ளது.
மேலும் படிக்க : பணப் பரிவர்த்தனைக்கு 15 வினாடிகள் - யுபிஐயின் அதிவேக சேவை
வெளிநாடுகளிலும் யுபிஐ :
இந்தியாவில் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரிசீயஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ பயன்படுத்தப்பட்டு அதன் பயன்பாடு விரிவடைந்து வருகிறது.
ஐரோப்பாவில், பிரான்ஸ் நாட்டில் முதல் முறையாக யுபிஐ அறிமுகம்(UPI in France & Japan) செய்யப்பட்டுள்ளது. இது வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பணம் செலுத்தும் முறையை எளிதாக்கியுள்ளது” இவ்வாறு சர்வதேச நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.
===========