5 Tips That Women Should Know When Buying Jeans Lifestyle Tips In Tamil source: google
லைஃப்ஸ்டைல்

JEANS வாங்க விரும்பும் பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய 5 டிப்ஸ்!

5 Tips That Women Should Know When Buying Jeans Lifestyle Tips In Tamil : ஜீன்ஸ் வாங்க விரும்பும் பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை..!

S Kavitha

5 Tips That Women Should Know When Buying Jeans Lifestyle Tips In Tamil : நவீன கால யுவதிகள் அதிகம் விரும்பும் ஆடையில் எப்போதும் முதல் இடத்தைப் பிடிப்பது ஜீன்ஸ் தான். ஒருமுறை வாங்கிவிட்டால் போதும் சீக்கிரமாக வெளுத்து போகாது, கிழிந்து போகாது அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். அதனால் தான் இளம் பெண்கள் பெரும்பான்மையாக ஜீன்ஸையே விரும்பி அணிகின்றனர்.

ஜீன்ஸ் விஷயத்தில் பெண்கள் செய்யும் தவறு

பெரும்பாலான பெண்கள் ஜீன்ஸை விரும்பினாலும் அவர்களின் தேர்வு என்னவோ தவறாகவே போய்விடுகிறது. ஏனென்றால் ஜீன்ஸ் வாங்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எப்படி வாங்க வேண்டும், ஜீன்ஸ் வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. பிடித்துவிட்டால் அப்படியே வாங்கிவிடுவர். சரி, இத்தனை நாள் தெரியவில்லையென்றால் என்ன இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஜீன்ஸ் வாங்கும் போது பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!

1. ஜீன்சின் தரம்

ஜீன்ஸ் வாங்கும் போது எப்போதும் உயர்தரமான , சற்று கனமான டெனிம் துணிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வாங்கும் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் தரமானதாக இருக்கும்.

2. பொருத்தமான அளவு

அடுத்தது உங்களுக்கு ஏற்ற அளவில் ஜீன்ஸைத் தேர்ந்தெடுப்பது. இதற்கு முதலில் நீங்கள் ஜீன்ஸை கையில் வாங்கி அதை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் இரண்டு விரல்களுக்கான இடைவெளி இருக்கிறதா என்று பாருங்கள். இடைவெளி இருந்தால் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் . இல்லையெல்லால் மிகவும் இறுக்கமாகத்தான் இருக்கும். அதேமாதிரி பின்புறத்தில் தையல் V வடிவில் இருக்கிறதா என்றும் சோதித்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.

3. ட்ரையல் பார்ப்பது கட்டாயம்

ஜீன்ஸ் துணியின் தரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதை அணியும் போது உங்களுக்கு கிடைக்கும் Comfort & Stretch மிகவும் முக்கியம். அதனால் எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கிவிடாமல் நேரடியாக சென்று ட்ரையல் பார்த்து வாங்கி அணிவது முக்கியமானது.

4. 100% பருத்தியை தவிர்த்தல்

மற்ற ஆடைகளின் தேர்வின் போது நாம் பருத்தியைத்தான் விரும்பி வாங்க வேண்டும். ஆனால் ஜீன்ஸில் மட்டும் பருத்தி ஆடையை அதாவது 100 சதவீதம் பருத்தியால் ஆன ஜீன்ஸைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் எளிதில் கிழிந்துவிடும். அதற்குமாறாக பருத்தியுடன் ஸ்பான்டெக்ஸ் கலந்து தயாரிக்கபட்ட ஜீன்ஸ் நீண்ட காலம் உழைக்கும் . எளிதில் கிழியாது.

5. நீளம் மற்றும் ஸ்டைல்

நீங்கள் டார்க் வாஷ் ஜீன்ஸ் பயன்படுத்தினால் அதிக வெர்சடைல் மற்றும் ஃபார்மல் தோற்றத்தையும், லைட் வாஷ் கேஷுவல் தோற்றத்தையும் தரும். மேலும் ஜீன்ஸ் உங்களது கணுக்கால் உயரத்திற்கு சரியான நீளம் இருப்பதை உறுதி செய்தி கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

இனி நீங்கள் ஜீன்ஸ் வாங்கும் போது இந்த 5 டிப்ஸ் ஞாபகம் வைத்திருந்தால் போதும் உங்களுக்கு ஃபிட்டான, நேர்த்தியான ஜீன்ஸ்-யை வாங்கி மகிழலாம்.

=====