7 dangerous symptoms indicating health issues! Do not ignore them! Ai generated
லைஃப்ஸ்டைல்

உடல்நலக் குறைபாட்டை உணர்த்தும் 7 ஆபத்தான அறிகுறிகள்! : அலட்சியப்படுத்தாதீங்க!

நமது உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிப்படுத்தும் 7 விசித்திரமான எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.

Kavitha prasanna

7 dangerous symptoms indicating health issues! Do not ignore them!

நமது உடல்நலம் பாதிக்கப்படும் போது, உடல் நமக்கு சில எச்சரிக்கை சிக்னல்களைத் தரும்.

ஆனால், நம்மில் பலர் அவற்றை சாதாரணமான ஒன்றாகக் கருதி கடந்து போய்விடுகிறோம். பிரபல பயிற்சியாளர் 'CoachDanGo' பகிர்ந்துள்ள, உடல் ஆரோக்கியம் சீராக இல்லை என்பதை வெளிப்படுத்தும் 7 ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகள் இதோ:

1. உயரத்தை விட அதிகமான இடுப்பு சுற்றளவு

உடல் ஆரோக்கியத்தைக் கணிக்க பிஎம்ஐ (BMI) அளவை விட, நமது உயரத்திற்கும் இடுப்பு சுற்றளவுக்குமான விகிதமே முக்கியமானது.

உங்கள் இடுப்பு சுற்றளவு, உங்கள் மொத்த உயரத்தில் பாதியை விட அதிகமாக இருந்தால், அது உள் உறுப்புகளைச் சுற்றி ஆபத்தான கொழுப்பு (Visceral Fat) தேங்கியிருப்பதைக் குறிக்கும்.

2. பல் துலக்கும்போது ஈறுகளில் கசியும் ரத்தம்

பொதுவாக பிரஷ் செய்யும் போது ஈறுகளில் ரத்தம் வரக்கூடாது. அப்படி ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உடலின் உட்பகுதியில் ஒட்டுமொத்தமாக ஏதோவொரு அலர்ஜி அல்லது வீக்கம் (Systemic Inflammation) ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது.

3. கழுத்து மற்றும் அக்குள்களில் தோன்றும் மருக்கள்

மருக்கள் தோன்றுவதை வெறும் தோல் அல்லது அழகு சார்ந்த பிரச்சனையாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், கழுத்து அல்லது அக்குள் போன்ற மடிப்புகளில் அதிகப்படியான மருக்கள் உருவாவது, உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin Resistance) அதிகரிப்பதன் அறிகுறியாகும்.

4. துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது

குறிப்பாக அசைவ உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, மிக மோசமான துர்நாற்றத்துடன் வாயு (Gas) வெளியேறினால், அது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உடலில் நார்ச்சத்து (Fiber) குறைவாக இருப்பதே இதற்கு முதன்மைக் காரணம்.

5. தூக்கத்தில் குறட்டை மற்றும் வாய்வழி சுவாசம்

இரவில் தூங்கும் போது குறட்டை விடுவதோ அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ சாதாரணமானதல்ல.

இது சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதையோ அல்லது 'ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea) போன்ற தூக்கக் குறைபாடு இருப்பதையோ காட்டுகிறது. இது உடலின் ஆற்றலையும் ஹார்மோன்களையும் சீர்குலைக்கும்.

6. தொடர் சோர்வு மற்றும் மனக்குழப்பம்

தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரை போதுமான அளவு தூங்கிய பிறகும், காலையில் எழும்போது சோர்வாகவோ அல்லது ஒருவித மந்தமான குழப்பத்துடனோ இருந்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது.

ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அல்லது மூளையில் ஏற்படும் லேசான பாதிப்புகளே இதற்கு காரணமாக இருக்கலாம்.

7. எளிய வேலைகளுக்கே ஏற்படும் மூச்சுத்திணறல்

படிக்கட்டுகளில் ஏறும் போதோ, சிறிய தூரம் நடக்கும் போதோ அல்லது லேசான எடைகளைத் தூக்கும் போதோ உடனே மூச்சு வாங்கினால், உங்களோட இதய ஆரோக்கியம் (Cardiovascular Fitness) பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

நிலைமை மோசமாவதற்கு முன்பாகவே, உடல் நமக்குத் தரும் இத்தகைய மெல்லிய சிக்னல்களைக் கவனித்து ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

=====