Do your nails break frequently? Don't worry-here are simple tips to maintain beautiful, strong nails! source: Ai generated
லைஃப்ஸ்டைல்

நகங்கள் அடிக்கடி உடைகிறதா? கவலை வேண்டாம்..நகங்கள் உடையாமல், அழகாக பராமரிக்க எளிய டிப்ஸ்!|Rice Water for Nail Care Tips!

சாதம் வடித்த கஞ்சித்தண்ணீரைக் கொண்டு நகங்களை எப்படி வலிமையாக்குவது மற்றும் நகப் பராமரிப்பிற்கான எளிய வீட்டு வைத்திய முறைகள் இதோ.

Kavitha prasanna

Do your nails break frequently? Don't worry—here are simple tips to maintain beautiful, strong nails!

அழகுப் பராமரிப்பில் நகங்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக, இன்றைய இளம்பெண்கள் மத்தியில் 'நெயில் ஆர்ட்' செய்துகொள்வது மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், நகங்களை அழகூட்டுவதற்கு அவை உடையாமல், வலிமையாக இருக்க வேண்டியது அவசியம்.

நகங்கள் ஏன் உடைகின்றன?

நகங்கள் பலவீனமடைந்து உடைவதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக உள்ளன.

உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு.

  • நெயில் பாலிஷ்களில் உள்ள அதிகப்படியான ரசாயனப் பயன்பாடு.

  • வீட்டு வேலைகள் செய்யும்போது நகங்களில் அழுக்கு மற்றும் ரசாயனங்கள் சேருவது.

நகங்களை வலுப்படுத்தும் சாதம் வடித்த நீர்

சாதம் வடித்த தண்ணீர் கூந்தலுக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது நகங்களையும் உடையாமல் பாதுகாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அரிசி நீரில் அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அவற்றை வலிமையாக்குகிறது.

சாதம் வடித்த நீரை பயன்படுத்தும் முறை

  • சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர் ஆறியதும், அதில் உங்கள் நகங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக நனைத்து வைக்க வேண்டும்.

  • பின்னர் சிறிது நேரம் கழித்து, சாதாரண தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும்.

  • இறுதியாக, தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் கொண்டு நகங்களை லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

  • வாரத்திற்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் உடையாமல் அழகாக வளரும்.

நகப் பராமரிப்பிற்கான கூடுதல் டிப்ஸ்

  1. ஈரப்பதம் முக்கியம்: கைகளையும் நகங்களையும் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல தரமான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.

  2. அசிட்டோன் இல்லாத ரிமூவர்: நெயில் பாலிஷ்களை அகற்றும்போது 'அசிட்டோன்' (Acetone-free) இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  3. பாதுகாப்பு உறைகள்: வீட்டு வேலைகள் அல்லது பாத்திரங்கள் கழுவும்போது நகங்களில் ரசாயனம் படாமல் இருக்க கைகளில் பாதுகாப்பு உறைகளை (Gloves) அணிந்து கொள்ளலாம்.

நகப்பராமரிப்பில் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை

  • நகங்களைக் கொண்டு டப்பாக்களைத் திறப்பது, கத்தரிப்பது அல்லது காய்ந்த நெயில் பாலிஷ்களை நகத்தாலேயே சுரண்டி சுரண்டி எடுப்பது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

  • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் நகங்களை உள்ளிருந்து வலுவாக்கும்.

    ========